ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் Vs கிளாஸ் வாட்டர் பாட்டில் : தினசரி பயன்பாட்டிற்கு எது சிறந்தது? - Agri Info

Adding Green to your Life

July 2, 2022

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் Vs கிளாஸ் வாட்டர் பாட்டில் : தினசரி பயன்பாட்டிற்கு எது சிறந்தது?

 நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் இன்னும் தொடர்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பது நம்மை ஆரோக்கியமாகவும், நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இருப்பினும் நம்மில் பலரும் தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிக்க மறந்து விடுகிறோம் அல்லது தாகம் எடுக்கவில்லை என்பதால் தவிர்த்து விடுகிறோம். வெளியில் செல்லும் போதெல்லாம் ஒரு பாட்டில் தண்ணீரை கையில் எடுத்து செல்வது நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதை எளிதாக்குகிறது. இந்த நாட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் ட்ரெண்டியாக உள்ளன. மேலும் வாட்டர் பாட்டில்கள் அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய பொருளாக மாறி இருக்கிறது.

நம் ஆரோக்கியத்தின் இன்றியமையாத ஒன்றாக நீரேற்றம் இருப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் கூடவே எடுத்து செல்ல லாங்-லாஸ்டிங் ரீயூசபிள் பாட்டிலை வைத்து கொள்வது அவசியம். ஆனால் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படையில் எந்த மாதிரியான வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்?

கிளாஸ் வாட்டர் பாட்டில்:

மெட்டல் அடிப்படையிலான வாட்டர் பாட்டில்களை போல கிளாஸ் வாட்டர் பாட்டில்கள் தண்ணீரின் சுவையை மாற்றாது. வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகி உள்ள ஒரு அறிக்கை, கண்ணாடி உடைந்து போகாமல் இருந்தால், கிளாஸ் வாட்டர் பாட்டில் பயன்படுத்துவது சிறந்த வழி என்று கூறுகிறது. 

கண்ணாடி இயற்கையான பொருட்களால் ஆனது என்பதால், அதை சூடாக்கும்போது அல்லது குளிர்விக்கும் போது கனிம ரசாயனங்கள் திரவங்களில் கசியும் அபாயம் இல்லை என்பது சிறப்பு. கிளாஸ் பாட்டில் உடைந்து விடும் என்று நீங்கள் கவலைப்பட்டால் கிளாஸ் வாட்டர் பாட்டில்களில் ஹீட்-ரெசிஸ்டன்ட் அல்லது ஷட்டர்ப்ரூஃப் ஆப்ஷன்களை நீங்கள் பார்க்கலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள்:

மெட்டல் பாட்டில்கள் அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (துருவேறா எஃகு) என்றும் அறியப்படுகிறது. இவை பற்றி வாஷிங்டன் போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, அவை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை, எனினும் இவை greenhouse gas emissions-ஐ உருவாக்குகிறது. இது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்களிப்பாக அமைகிறது.

மேலும் திரவத்தில் அலுமினியத்தின் சிறிய பரிமாற்றம் இருக்கலாம். சமையல் தர துருவேறா எஃகு மூலம் தயாரிக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் கிளாஸ் அல்லது பிளாஸ்டிக்கை விட நீண்ட காலம் நீடிக்கும். அதே போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டிலை வாங்கும் போது, அதில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நிரம்பியிருக்கலாம் என்பதால் அதில் பிளாஸ்டிக் அல்லது பிசின் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் போன்ற மற்ற பொருட்களை விட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சற்று விலை உயர்ந்தது என்றாலும், அவை ஆற்றல் மிகுந்தவை. மேலும் 100% மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.


Click here to join whatsapp group for daily health tip 

No comments:

Post a Comment