நக ஆரோக்கியம் குறித்து பரவும் 10 கட்டுக்கதைகளும் உண்மைக்ளும்... - Agri Info

Adding Green to your Life

August 13, 2022

நக ஆரோக்கியம் குறித்து பரவும் 10 கட்டுக்கதைகளும் உண்மைக்ளும்...

 

வலுவான, ஆரோக்கியமான நகங்கள் உடலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன் என்று கூறப்படுகிறது. நகங்கள் நம் உடலின் ஒரு சிறிய பகுதி என்பதை கருத்தில் கொண்டு அவற்றை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

1. டயட்டில் ஜெலட்டின் (gelatin) சேர்ப்பது பலவீனமான நகங்களை வலுப்படுத்தும்

ஜெலட்டின் ஒரு புரதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் நகங்களும் கெரட்டின் (புரதம்) மூலம் உருவாக்குகின்றன. இந்நிலையில் ஜெலட்டின் நகங்களை வலுப்படுத்தும் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இல்லை. எனவே நகங்களை வலுவாக்க உங்கள் தினசரி டயட்டில் புரதங்கள் உட்பட நல்ல ஊட்டச்சத்துக்களை சேர்க்கவும்.

2. நகங்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஃபேஷன் பாகங்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்

விரல் நகங்களுக்கு மேல் வைக்கப்படும் நீட்டிப்புகளான செயற்கை நகங்கள், போலி நகங்கள், அக்ரிலிக் நகங்கள், நக நீட்டிப்புகள் உள்ளிட்ட ஃபேஷன் பாகங்களை அவ்வப்போது அகற்ற வேண்டும் என்பதில்லை. ஆனால் இதற்கு சர்வதேச தரத்திலான நல்ல தரமான தயாரிப்புகளை பயன்படுத்தினால் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. அதே போல நகத்தின் மேல் பயன்படுத்தப்படும் ஒரு சில ஃபேஷன் பாகங்களை அகற்ற அதிக நுட்பம் தேவைப்படும். எனவே நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு சிறப்பாக இருந்தால் உங்கள் நகங்கள் அழகாக அதே சமயம் பாதுகாப்பாக இருக்கும்.

3. கெமிக்கல்கள் கொண்ட நெயில் ப்ராடக்ட்களை தவிர்க்க வேண்டும்

நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் கெமிக்கல்கள் உள்ளன. பெரும்பாலான நக நுகர்பொருட்கள் பெட்ரோலியம் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. எனவே கெமிக்கல்கள் இல்லா நக தயாரிப்பு என்று எதுவும் இல்லை. மூன்று வாரங்களுக்கு உங்கள் நகங்களில் இருக்கும் ஆர்கானிக் ஆணி தயாரிப்பு எதுவும் இல்லை. மேலும் 3 வாரங்களுக்கு உங்கள் நகங்களில் இருக்கும்படியான ஆர்கானிக் நக தயாரிப்பு எதுவும் மார்க்கெட்டில் இல்லை.

4. நகத்தின் மேல் பயன்படுத்தப்படும் ஃபேஷன் பாகங்கள் இயற்கை நகத்தை நாசமாக்கும்

தற்போது நாம் நெயில் ஆர்ட் காலத்தில் இருக்கிறோம். தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது, தயாரிப்புகள் யூசர் ஃபிரெண்ட்லியாக உள்ளன. எனவே உங்களுக்கு தேவை ஒரு நல்ல நெயில் டெக்னீஷியன் தான். நன்றாக திறம்பட அப்ளை செய்யப்படும் என்ஹாஸ்மென்ட்ஸ் ( ஃபேஷன் பாகங்கள்) இயற்கையான நகங்களை சேதப்படுத்தாது. நீங்கள் வலி அல்லது அசௌகரியத்தை சந்தித்தால் நிச்சயமாக அனுபவம் இல்லாத நெயில் டெக்னீஷியன் அல்லது மலிவான ரசாயனங்களை பயன்படுத்துவது காரணமாக இருக்கலாம்.

5. நீண்ட நாள் இருக்க நெயில் பாலிஷை ஃபிரிட்ஜில் வைக்கலாமா.?

இப்போது பலரும் ஜெல் நெயில் பாலிஷ் பயன்படுத்தி வருகிறீர்கள். இருப்பினும் நீங்கள் சில நேரங்களில் தற்காலிக பாலிஷை பயன்படுத்தினால், ஆவியாவதை தவிர்க்க பயன்படுத்திய பிறகு நீங்கள் பாட்டிலை இறுக்கமாக மூட வேண்டும். நீங்கள் அதை ஃபிரிட்ஜில் வைத்தால் பயன்படுத்தும் முன் அதை அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து விட்டு பயன்படுத்துங்கள். நெயில் பாலிஷின் ஆயுளை ஃபிரிட்ஜ் அதிகரிக்காது.

6. சிலரின் நகங்களில் பச்சை நிறத்தில் இருப்பது பூஞ்சையா?

சிலரின் நகங்களில் பச்சை நிறத்தில் இருப்பது மச்சமா அலல்து பூஞ்சையா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பூஞ்சையோ அல்லது மச்சமோ ஒரே இரவில் தோன்றாது. நகத்திக் காணப்படும் பச்சைப் புள்ளியை ஆய்வு செய்ய சோதனைகள் உள்ளன. தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளை கல்ச்சர் டெஸ்ட் (culture test) மூலம் மட்டுமே நிரூபிக்க முடியும்.

7. நகங்களை ஐஸ் வாட்டரில் மூழ்க வைப்பது நெயில் பாலிஷை விரைவாக உலர்த்த உதவுமா?

டெம்ப்ரவரி பாலிஷை இன்னும் பயன்படுத்தும் சிலர் இருக்கிறார்கள். நெயில் பாலிஷ் விரைவாக உலர அத சால்வெண்ட்ஸ் ஆவியாக வேண்டும். எனவே நெயில் பாலிஷ் ஆவியாவதை விரைவுபடுத்த நீங்கள் ஃபேன் முன் கைகளை காட்டலாம். அல்லது ஐஸ் வாட்டரில் 3-5 நிமிடங்கள் நகங்களை மூழ்கும்படி வைக்கலாம்.


8. UV ஜெல் அக்ரிலிக்ஸை விட சிறந்தது..

அக்ரிலிக்ஸை விட UV ஜெல் மிகவும் சிறந்தது என்று யாராவது உங்களிடம் எவ்வளவு சொன்னாலும் அது உண்மையல்ல. இரண்டுமே ரசாயனங்கள் மற்றும் இயற்கையான நகத்துடன் பிணைக்க சில சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியது.

9. க்யூட்டிகல்ஸை கட் செய்யலாமா?

துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ‘க்யூட்டிகல்’ மற்றும் ‘எபோனிச்சியம்’ இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது. க்யூட்டிகல் என்பது நகத் தட்டில் உள்ள இறந்த தோல் மற்றும் எபோனிச்சியம் உயிருள்ள தோல். மேற்புறத்தை அதாவது க்யூட்டிகல் அகற்றுவது பரவாயில்லை, ஆனால் எபோனிசியத்தை வெட்டுவது தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

10. நகத்தில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் வைட்டமின் குறைபாட்டை குறிக்கின்றன..

நகங்களில் உள்ள வெள்ளை புள்ளிகள் கால்சியம் குறைபாட்டின் அறிகுறி என்பது பொதுவான நக கட்டுக்கதைகளில் ஒன்று. பெரும்பாலும் மேகத்தின் வெள்ளை புள்ளிகள் நக காயத்தின் விளைவாகும். நகங்களை எடுப்பது, கடித்தல், நகக் கருவிகளை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நகத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் இந்த வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன.

 Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment