மிக அதிகமாக மது அருந்துவது, துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, தவிர்க்க முடியாத மன அழுத்தம் மற்றும் பல்முனை வேலைப்பளு உள்பட நமது உடல் மற்றும் மனதின் அதிகப்படியான சுமையை ஏற்றுக் கொண்டு மிகவும் அமைதியாக வேலை செய்யக்கூடிய ஒரு உறுப்பு கல்லீரல் ஆகும். நமது உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து தொடர்ந்து நிலையாக இயங்க வைப்பதற்கும், செல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் கல்லீரல் அயராது பாடுபடுகிறது.
உடலின் மிகச் சிறிய உறுப்பாக கல்லீரல் அறியப்பட்டாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் தேவை என்பது மிக, மிக பெரியதாகும். பைல் திரவத்தை உற்பத்தி செய்வது, புரதம் மற்றும் கொழுப்புகளை உற்பத்தி செய்து அதன் மூலமாக மாவுச்சத்து, விட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை சேமிப்பது, உணவில் உள்ள நச்சுக்களை உடைப்பது, மது, மருந்துகள் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை உடைத்து வெளியேற்றுவது என இன்றியமையாத பணிகளை செய்து வரும் கல்லீரல், நமது மூளையின் நலனுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிறது. இத்தகைய கல்லீரலின் நலனை காக்கும் வகையிலான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேநீர் : ஆம், டீ அருந்துவது கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் செல்களை மீட்டுருவாக்கம் செய்யும். குறிப்பாக பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவற்றை தினசரி அருந்தி வந்தால் கல்லீரலில் சுரக்கும் நொதிகளின் சுரப்பு ஊக்குவிக்கப்படும். இதனால் கல்லீரலில் கொழுப்பின் அளவு குறையும். டீயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் நமது உடலில் தேவையற்ற ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும், பல்வேறு விதமான புற்றுநோய்களை தடுக்கவும் உதவும்.
திராட்சை பழம் : இயற்கையாகவே ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்த திராட்சை பழங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கல்லீரலில் பாதிப்படைந்த செல்களை சீரமைக்கவும், புதிய செல்களை உருவாக்கவும் இது உதவுகிறது. திராட்சைப்பழம் சாப்பிடுவதன் மூலமாக கல்லீரலில் ஏற்படும் நீண்ட கால அழற்சி மற்றும் வலி போன்றவை கட்டுப்படுத்தப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பு நிறைந்த மீன் : ஒமேகா 3 பேட்டி ஆசிட் வகை கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வதன் மூலமாக கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை நீக்குவதுடன், கல்லீரலில் உள்ள அலற்சியை போக்கவும் முடியும். தினசரி கொழுப்பு உள்ள மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகை கொழுப்புகளை கரைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பீட்ரூட் ஜூஸ் : நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கொள்வதாகும். இதில் நைட்ரேட்ஸ் மற்றும் ஆண்டிஆக்சிடண்ட் போன்றவை நிறைந்துள்ளன. இவை கல்லீரல் மற்றும் இதய நலனுக்கு உகந்ததாகும். உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும் செல்களை உருவாக்கவும் பீட்ரூட் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கிறது.
பெர்ரி பழங்கள் : புதிய பெர்ரி பழங்கள் அல்லது உலர வைக்கப்பட்ட பெர்ரி பழங்களை எடுத்துக் கொண்டால் கல்லீரல் நலன் மேம்படும். இதில் உள்ள ஆந்தோசயனின்ஸ் என்ற ஆண்டிஆக்சிடண்ட் நமது நோய் எதிர்ப்பு செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் பெர்ரி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் கட்டிகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment