Search

உடற்பயிற்சி, டயட்... இவை எதுவும் உடல் எடையை குறைக்க உதவலையா..? அப்போ இதை டிரை பண்ணி பாருங்க..

 ஆரோக்கியமான முறையில் எப்படி எடை குறைப்பது என்பது தற்போது பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை! எடை குறைக்க முடியாமல் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி ரெண்டரை கோடி மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 3.4 கோடியாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட இந்தியன் அடல்ட் மக்கள் தொகையில் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4% அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வெளியிட்ட அறிக்கை குறிக்கின்றது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலேயே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் 67.5 கோடி மக்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சுறுத்தக்கூடிய தகவலும் வெளியாகியுள்ளது.

உடல் பருமன் என்றால் என்ன..?

மூத்த பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ராஜ் பழனியப்பன் உடல் பருமனை பற்றி கூறுகையில், ‘உடல் பருமன் என்பது உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை குறைக்கிறது. வழக்கமாக ஒரு உடலில் இந்த அளவுக்கு தான் கொழுப்பு இருக்க வேண்டும் என்பதை விட அதிகமாகவோ அல்லது அசாதாரணமான அளவிலோ கொழுப்பு சேர்வது உடல்பருமன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையால் உடல் ஆரோக்கியமும் உடல் நலமும் பெரிதாக பாதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

உடல் பருமனை பாடி மாஸ் இன்டெக்ஸ் என்ற அளவீட்டின்படி கணக்கிடலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு நபரின் பூர்வீகத்தின் அடிப்படையில் BMI கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, தெற்கு ரஷ்யர்கள், ஆப்பிரிக்கர்களின் பிஎம்ஐ 30 க்கு மேல் இருக்கலாம் ஆசிய மற்றும் அரேபிய நாடுகளில் காகசியர்களை விட 2.5 புள்ளி குறைவான BMI தான் சராசரி அளவாகக் கருதப்படுகிறது.

உடல்பருமனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன?

உடல் பருமன் என்பது சமீப காலமாக மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உடல் பருமன் என்பது ஒரு நேரடி நோய் அல்ல என்றாலும் உடல் பருமனால் பல விதமான தீவிரமான நோய்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உட்பட இதய நோய் பாதிப்புகள் மற்றும் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கம் சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் அனைத்துமே உடல் பருமனுடன் தொடர்புடையது. அது மட்டுமில்லாமல் எலும்பு தேய்மானம், எலும்பு உருக்குதல், கல்லீரல் கொழுப்பு நோய் ஆகியவையும் உடல் பருமனால் ஏற்படக்கூடிய நோயாகும். உடல் பருமன் ஒரு நபரின் ஆயுளை 10 % வரைக் குறைக்கிறது இன்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டில் இருந்தும் ஏன் எடை குறையவில்லை?

நமக்கு வயதாக வயதாக வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் குறைய துவங்கும். உடல் பருமன் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனவே தான் உடலின் மெட்டபாலிசத்தை சரியான அளவில் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு தான் உடல் உழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை தினமும் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி மட்டும் செய்து உணவு கட்டுப்பாடு இல்லாமல் அல்லது டயட் பின்பற்றி உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் மெட்டபாலிசம் மாற்றம் அடையாமல் உடல் எடை குறையாது.

அது மட்டுமல்லாமல் பெண்களை பாதிக்கும் ஹார்மோன் இம்பேலன்ஸ், பிசிஓடி, தைராய்டு ஆகிய குறைபாடுகளால் உடல் எடை குறைப்பதில் சிரமம் ஏற்படலாம். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ‘தூக்கமின்மை’ என்று மருத்துவர் தெரிவிக்கிறார். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் இவை இரண்டையும் சரி செய்யும் வரை எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், டயட் பின்பற்றினாலும் உடல் எடை குறையாது என்று அவர் தெரிவித்தார்.

உடல் பருமனுக்கு வேறு தீர்வு - எடை குறைப்பு அறுவை சிகிச்சை

என்ன செய்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு பேரியாட்ரிக் சர்ஜரி என்ற எடை குறைப்பு அறுவை சிகிச்சை உதவும். சராசரியான உடல் எடையை விட பெண்கள் 30 கிலோ எடை அதிகமாக இருந்தாலும், ஆண்கள் 40 கிலோ எடை அதிகமாக இருந்தாலும், உடல் பருமனால் அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை என்றாலும் இந்த அறுவை சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளலாம்.

பாரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல முறைகள் உள்ளன. உங்களுடைய உடல் ஆரோக்கியம், நீங்கள் எவ்வளவு எடை குறைக்க வேண்டும் மற்றும் இணை நோய்கள் அபாயம் என்ற பல விதமான காரணிகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல மருத்துவர்கள் உங்களுக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைப்பார்.

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment