தோராயமாக ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக வசதி படைத்தவர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் வீடுகளில் மட்டுமே இடம் பிடித்திருந்த ஃபிரிட்ஜ் என்னும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அனேகமாக அனைத்து வீடுகளிலும் இடம்பெற்றுள்ளது. நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஃபிரிட்ஜ் என்றால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைப்பதற்கான இடம் ஆகும். அதில் வைக்கும் பொருட்களின் தரம் குறையாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
ஆனால், ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில உணவுப் பொருளின் நிறம், சுவை, மனம் ஆகியவை மாறி விடுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களை மாத கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அது கெட்டுப் போகும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆகவே, ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ…
மாங்காய் : பழுக்காத மாங்காய்களை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் பழுக்கும் தன்மையை இது குறைத்துவிடுகிறது. பழுத்த மாம்பலங்களை மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அது திடமாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.
ஃபிரெட் : நாம் எல்லோருமே ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். ஆனால், ஓரிரு நாட்கள் தாண்டி ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
எண்ணெய் : எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் இயற்கை தன்மை மற்றும் நிறம் ஆகியவை மாறிவிடும். மேலும் எண்ணெய்யின் மனம் மாறிவிடும்.
சமைக்கப்பட்ட இறைச்சி : சமைத்த கோழி அல்லது ஆட்டிறைச்சி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். ஒன்றிரண்டு நாட்களை தாண்டி வைத்திருக்கும் பட்சத்தில் உணவு கெட்டுப்போய் விஷமாக மாறக் கூடும். இது செரிமானக் கோளாறுகள் மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளை கொண்டு வரும்.
தேன் : சாதாரணமாக அறையின் வெப்ப அளவிலேயே வெகு காலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடிய பொருள் தேன் ஆகும். ஆனால், இதனை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அது கிறிஸ்டலாக மாறி விடுகிறது. மீண்டும் பயன்படுத்துவதற்கு கடினமானதாக மாறிவிடும்.
மசாலா பொருட்கள் : புதினா, கொத்தமல்லி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் இருக்கும்போது அதில் உள்ள ஈரப்பதம் வெளியாகி, வாடி வதங்கிவிடும். புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சாதாரணமாக காகிதப் பையில் போட்டு வைப்பதன் மூலமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment