மூட்டழற்சி (Arthritis - ஆர்த்ரைடிஸ்) என்பது மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்படும் ஒரு நிலை ஆகும். ஆர்த்ரைடிஸ் நிலை மூட்டுப் பகுதிகளை சுற்றி தீவிர வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதை குறிக்கிறது. இந்த ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் என்பதை முற்றிலும் குணப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
ஏனென்றால் பெரும்பாலும் இந்த நிலை வயது மூப்புடன் தொடர்புடையது. வயது காரணிகளில் ஏற்பட கூடியது என்றாலும் மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பெரிய அதிர்ச்சி அதாவது மோசமான காயங்கள், நோய் தொற்று, அதிக எடை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையும் ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் ஏற்பட காரணங்களாக அமைகின்றன. எனவே ஆர்த்ரைடிஸ் நிலையை நிர்வகிப்பது ஒன்றே நோயாளிகளுக்கு நிவாரணம் தர கூடிய வழி. இந்த நிலையால் பாதிக்கப்படுவோருக்கு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும் பல உணவுகள், மருந்துகள் உள்ளன.
இதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய்யும் உள்ளது. அந்த சமையல் எண்ணெய் மூட்டு பகுதிகளை சுற்றியுள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ஆர்த்ரைடிஸ் கண்டிஷனை நிர்வகிக்க உதவும் அந்த அதிசய ஆயிலின் பெயர் ஆலிவ் எண்ணெய். ஆலிவ் எண்ணெய்யில் மொத்தம் 3 முக்கிய வகைகள் உள்ளன. ரீஃபைன்ட் ஆயில், வெர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில். இதில் குறிப்பாக எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆர்த்ரைடிஸ் பாதிப்புக்கு ஏற்றதாகும். சாதரண ஆலிவ் எண்ணெய்க்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சால்வென்ட்ஸ் அல்லது சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தாமல் கோல்ட் மெக்கானிக்கல் எக்ஸ்ட்ராக்ஷன் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட வெர்ஜின் ஆலிவ் எண்ணெயின் மிக உயர்ந்த தர எண்ணெய் தான் இது. சுருக்கமாக சொன்னால் இது ஆலிவ் எண்ணெயின் குறைந்த பதப்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். மேற்கண்ட 3 வகைகளில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமாதாக கருதப்படுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்..
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கி உள்ளன. தவிர இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.இதில் காணப்படும் முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்களில் ஒன்று oleocanthal ஆகும். ஆய்வின் படி, கூட்டு-சிதைவு நோய், நரம்பியல் சிதைவு நோய் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்கள் உட்பட அழற்சி தொடர்பான நோயை குறைப்பதில் oleocanthal பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற மருத்துவ பரிசோதனையை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சி ஒன்று ஆய்வில், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை ஆர்த்ரைடிஸ் நிலை இருக்கும் பகுதியில் பயன்படுத்தும் போது முடக்கு வாதத்தின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வு, ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணியான இப்யூபுரூஃபன் மருந்தைப் போலவே செயல்படுவதாகக் கூறுகிறது.
அதிகம் கூடாது..
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் நமக்கு நல்லது என்றாலும், அதை அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு 1-4 டேபிள்ஸ்பூன் வரை ஆலிவ் ஆயில் டயட்டில் சேர்த்து கொள்வது நல்லது. ஒருவர் உட்கொள்ளும் எண்ணெயின் அளவு உணவின் வகை மற்றும் உணவின் தன்மையைப் பொறுத்து மாறும் என்றாலும், அளவோடு எண்ணெய்யை எடுக்கவே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஏற்ற நேரம்?
நிபுணர்களின் கூற்றுப்படிஎக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளும் போது அதிசயங்களை செய்யும். அழற்சி எதிர்ப்பு நன்மைகளை பெற ஒரு நாளின் காலை நேரத்தில் முதலில் இதை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. காலையில் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்வது சருமத்தை மேம்படுத்த, கூடுதல் எடையை இழக்க, பெருங்குடல் புற்றுநோயை தடுக்க என பல வகைகளில் உதவுகிறது.
ஆர்த்ரைடிஸ் நோயாளிகள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். புகைப்பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிட வேண்டும். நல்ல தோரணை மற்றும் மூட்டுகளை நகர்த்துவது அவசியம். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். ஓவர்-தி-கவுன்டர் வலி நிவாரணிகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment