ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனையாகும். உலக அளவில் மிக அதிகப்படியான மரணங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஸ்டிரோக் ஏற்படும்போது தோள்கள் பலவீனம் அடைவது, முகம் இழுப்பது மற்றும் பேச்சு குளறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது நெஞ்சுப் பகுதியில் வலி, உடலின் மேல் பகுதியில் வலி, மூச்சுத்திணறல் மற்றும் குளிர்ச்சியான வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படும். சைலண்ட் கில்லராக இருக்கும் இந்த இரண்டு நோய்களையும் முறியடிக்க வேண்டும் என்றால் இதன் தன்மை என்ன, எப்படி பாதிக்கும் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும்.
ஏன் இது கவலைக்குரிய விஷயம்? :
இந்த இரண்டு பிரச்சனைகளுமே ஆரம்பகால அறிகுறிகள் எதையும் காட்டாது. லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் அதை புறக்கணிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடும். சிலர் அறிகுறிகளை உணர்ந்தாலும், அவை வேறு நோய்களுக்கான பாதிப்புகள் என தவறாக புரிந்து கொள்கின்றனர்.
அபாயம் அதிகரிப்பதற்கான காரணங்கள் :
சமூகத்தில் இருந்து விலகி நிற்பது மற்றும் தனிமை உணர்ச்சி ஆகியவை காரணமாக ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யாருக்கெல்லாம் அபாயம் அதிகம்? :
இந்த இரண்டும் ஒன்றும்போல தோன்றினாலும் இவற்றுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு. சிலர் சுய விருப்பத்தின் அடிப்படையில் மற்றவர்களிடம் இருந்து விலகி இருந்தாலும் தன்னைத்தானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை செய்து கொள்வார்கள். அதே சமயம், சிலர் சமூகத்துடன் இணைந்து பழகினாலும் கூட தனக்குள் கவலைகளை ஒழித்து வைத்துக் கொள்வார்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் :
சமூக விலகல் மற்றும் தனிமை உணர்வு ஆகிய இரண்டையும் மிகவும் பிரச்சனைக்குரிய விஷயங்களாக அணுக வேண்டும். மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம், அவர்கள் எந்த அளவுக்கு சமூகத்தோடு இணைந்து பழகுகின்றனர் அல்லது தனிமையில் இருக்கின்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
வாழ்வியல் மாற்றங்கள் :
உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும். குறிப்பாக, புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment