சிலர் உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பை பிடித்துக்கொண்டே எழுவார்கள். காரணம் இடுப்பில் அவ்வளவு வலி இருக்கும். ஆனால் இதை பலரும் சாதாரணமாக கடந்துவிடுவார்கள். உண்மை என்னவெனில் இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ இடுப்பு வலி ஏற்படுவது இயல்பானது அல்ல. இது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர்ச்சியாக வேலை செய்வது அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது மோசமான தோரணை இடுப்பு வலியை அதிகரிக்கிறது.
சில நேரங்களில் இந்த வலி இரண்டு இடுப்புக்கு பதிலாக ஒரு இடுப்பில் ஏற்படும். வயது ஏற ஏற இடுப்பு வலி அதிகரிப்பது இயற்கை. சில நேரங்களில் இந்த வலி அதிகமாகி அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் காயம் அல்லது திரிபு கூட இடுப்பு வலிக்கு காரணமாகிறது. அதாவது மூட்டுவலி காரணமாக, மூட்டுகளின் குருத்தெலும்பு சேதமடைகிறது. இது இடுப்பு வலிக்கு வழிவகுக்கும். இப்படி இடுப்பு வலிக்கான முக்கியமான சில பொதுவான காரணங்கள் என்ன என்பதை காணலாம்.
மோசமான தோரணை :
ஹெல்த்லைன் படி, இடுப்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் மோசமான தோரணையின் அமர்வது அல்லது நடப்பது பெரிய காரணம். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, லாங் டிரைவ் செய்வதாக இருந்தாலும் சரி, இருக்கை மோசமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இடுப்பு மற்றும் முதுகுக்கு சப்போர்ட் இல்லாமல் உட்கார்வதால், இடுப்பு மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இதன் காரணமாக இடுப்பு வலி பிரச்சனை இருக்கலாம்.
சேதமடைந்த இடுப்பு மூட்டுகள் :
காலின் பெரிய எலும்பை இடுப்பு மூட்டுகளில் சரியாக இணைக்காத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு சேதமடைந்தால் அல்லது சேதமடையும் போது, இடுப்பு வலி பிரச்சனை தொடங்குகிறது. இது நிகழும்போது, சில நேரங்களில் பாதங்களில் கடுமையான வலி ஏற்படலாம். பல சமயங்களில், உட்கார்ந்து எழும் போது, கடுமையான வலியை உண்டாக்கும்.
No comments:
Post a Comment