Search

உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா.? இந்த உணவுகளை முயற்சித்து பாருங்கள்.!

 


சிலருக்கு கண்கள் வறண்டு போவது என்பது மிகவும் பொதுவான மற்றும் சங்கடமான நிலை. சிலருக்கு மற்றவர்களை விட கண் வறட்சி அதிகமாக இருக்கும். டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின், அலர்ஜி, முந்தைய கண் அறுவை சிகிச்சை, நீண்ட நேரம் கண் சிமிட்டாமல் இருப்பது, சில மருந்துகள் அல்லது வயது உள்ளிட்ட காரணிகளால் கண்கள் வறட்சி ஏற்படுகின்றன.
 அடிக்கடி கண்கள் சிவந்து போதல், கண்கள் அரிப்பு, கண்கள் வீக்கம், கண் எரிச்சல், ஒளி உணர்திறன், நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்ப்பதில் சிரமம் உள்ளிட்டவை வறண்ட கண் பிரச்சனையின் சில பொதுவான அறிகுறிகளாகும். வயது போன்ற சில காரணிகள் தவிர ஹார்மோன் மாற்றங்கள் கண் வறட்சியை தூண்டும். எனினும் கடுமையான உலர் கண் அறிகுறிகளை தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க சில வழிகள் உள்ளன.

கண்களை உயவூட்டுவதற்கு போதுமான கண்ணீரை உடல் உற்பத்தி செய்யாத போது இந்த நாள்பட்ட நிலை ஏற்படுகிறது. கண் மருத்துவர்களின் கூற்றுப்படி, சத்தான உணவைப் பின்பற்றுவது கண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. கண் வறட்சியுடன் நீங்கள் போராடி வந்தால் உங்களுக்காக நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்...
மீன்: கண்கள் வறட்சியடையும் சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று மீன். ஏனெனில் பெரும்பாலான மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கண்ணில், குறிப்பாக கண்ணீர் நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கண்ணீரின் அளவு மற்றும் தரத்திற்கு உதவுகிறது. சால்மன், ஹாலிபுட், ஹெர்ரிங், டுனா போன்றவை அதிக சத்துக்களை கொண்ட மீன்கள்.

பச்சை இலை கீரைகள்: சில கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது வயதாவதால் ஏற்படும் கண் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிறந்த வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்த கீரைகள் முட்டைக்கோஸ், காலார்ட்ஸ் மற்றும் பசலை கீரை உள்ளிட்டவை.

சீட்ஸ்: நாள்பட்ட கண்கள் வறட்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா மற்றும் ஆளி விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மற்றொரு சிறந்த மூலமாக இருக்கின்றன. மீன்களை திங்க முடியாத சைவ உணவு உண்பவர்களுக்கு உண்மையில், ஆளிவிதை எண்ணெய் ஒமேகா-3 சப்ளிமெண்ட்களுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.

நட்ஸ்: வைட்டமின் ஈ என்பது வைட்டமின் சி போன்றே ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கண்ணீர் உற்பத்தியில் ஏற்படும் சேதம் உட்பட வயது தொடர்பான காரணத்தால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய முக்கிய இரண்டும் நிறைந்துள்ளன. வால்நட்ஸ், பீனட்ஸ், முந்திரிகள். பிரேசில் நட்ஸ் போன்றவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ்கள்.

பீன்ஸ்: பீன்ஸில் ஃபோலேட் மற்றும் ஜிங்க் உள்ளது. மெலனின் உற்பத்திக்கு உடலில் போதுமான ஜிங்க் இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்கள் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வறண்ட கண்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது, குறிப்பாக சூரியனால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

தண்ணீர்: நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் போதுமான நீர்சத்து இல்லாவிட்டால் கண்கள் வறண்டு போகும். குறிப்பாக நீங்கள் வெப்பமான, வறண்ட சூழலில் வாழ்ந்தால் சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது கண்கள் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.
 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment