உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் இந்த பதிவில் விரிவாக காண்போம்.
உங்கள் உடலின் இயற்கையான செயல்முறையை பாதிக்கலாம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. இது 96 மில்லிகிராம் கஃபின் கொண்ட ஒரு கப் காபியுடன் ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், தினசரி டீ குடிக்கும் போது அதில் உள்ள கஃபின் நம் உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நாம் விழித்திருக்கும் மற்றும் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேர காலப்பகுதியில் நம் உடல்கள் பின்பற்றும் வழிமுறைகளை நமது சர்க்காடியன் அமைப்பு சமநிலைபடுத்துகிறது. ஒளி, மன அழுத்தம், வேலை மற்றும் காஃபின் போன்றவை நம் சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும்.
நமது இயற்கையான ரிதத்தை பராமரிப்பது மிக முக்கியம். ஏனென்றால் இது பகலில் அதிக எச்சரிக்கையை உணரவும், இரவில் நன்றாக தூங்கவும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாம் அதிகப்படியான கஃபின் கொண்ட தேநீரை அருந்தினால், அது நம் தூக்கத்தை சீர்குலைக்கும். இது நமது சர்க்காடியன் ரிதத்தையும் சீர்குலைக்கும்.
தொடர்ச்சியாக சீர்குலைந்த சர்க்காடியன் அமைப்பு இருதய பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இரவுநேர தேநீர் குடிக்கும்போது கிரீன் டீ க்கு பதிலாக மூலகை டீயை பருகலாம்.
உணவுக்குழாயில் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்: சூடான தேநீர் குடிப்பது உண்மையில் உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வடக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக அளவு சூடான பிளாக் டீ குடிப்பது என கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன.
சூடான காபி மற்றும் சூடான தேநீர் இரண்டும் உணவுக்குழாயில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
இதற்கான சரியான விளக்கத்தை பெற ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள் இது நமது உணவுக்குழாயின் உள் வெப்பநிலையுடன் தொடர்புடையது என்று நம்புகின்றன. உதாரணமாக, ஒரு கப் டீ 150 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால், நமது உணவுக்குழாய் 127 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கோடையில் ஐஸ் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
உடலில் இரும்புச்சத்து அளவை குறைக்கலாம்: டீ ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரத்த சோகை அல்லது வேறு எந்த வகையான இரும்பு தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் டீ குடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளது. புட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிசன் நடத்திய ஆய்வில், பிளாக் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் இரும்பு சத்து கிடைப்பதை 94% வரை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் ஒரு பொருளின் உயிர் கிடைக்கும் தன்மை முக்கியமானது. ஏனெனில் இது நம் உடலால் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்பதற்கான அளவீடாகும்.
தேயிலையில் காணப்படும் டானின்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று நியூட்ரிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானின்கள் தேயிலை, ஒயின் மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படும் ஒரு இயற்கை கலவை ஆகும். மேலும் அவை நிலையான நுகர்வுக்குப் பிறகு இரும்பின் உயிர் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, நீங்கள் சோர்வு, அமைதியின்மை, வறண்ட சருமம், தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம் : பிளாக் மற்றும் கிரீன் டீ இரண்டும் டையூரிடிக்ஸ் என்று கருதப்படுகிறது. இவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். டையூரிடிக்ஸ் இயற்கையாகவே சிறுநீரகங்களில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் சோடியம் இயற்கையாகவே தண்ணீருடன் வெளியேறும். டீ சில நேரங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், இது பெரும்பாலும் நீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படாத ஒருவரில் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தி பார்மா இன்னோவேஷன் இதழில் வெளியான அறிக்கையின்படி, கிரீன் மற்றும் பிளாக் டீ-யில் உள்ள டையூரிடிக் தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது சோம்பல், அதிகரித்த அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கடுமையான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்: டீயில் காணப்படும் பல இயற்கை சேர்மங்களில், தியோபிலின் கவனிக்க வேண்டிய பொதுவான ஒன்றாகும். இந்த கலவை காபி மற்றும் டீ இரண்டிலும் காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு காற்றுப்பாதை தசைகளை மென்மையாக்க பயன்படுகிறது. இது அதன் சுவாச நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இது சில லேசான மற்றும் எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். புற்றுநோய் ஆராய்ச்சிக்கான இன்டெர்னல் ஏஜென்சி அமைப்பின் அறிக்கையின்படி, தியோபிலினை உட்கொள்வது இரைப்பை குடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். பிற ஆதாரங்களும் தியோபிலின் மலச்சிக்கல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சினைகளை அனுபவிக்கும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு பிடித்த ஒரு கப் டீ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment