உடலில் இந்த பிரச்சனை இருந்தால் நகத்தில்தான் முதலில் காட்டும்.. எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள்... - Agri Info

Adding Green to your Life

August 13, 2022

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் நகத்தில்தான் முதலில் காட்டும்.. எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள்...

 நமக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காத போது தான் நகங்கள் உடைந்து விரிசல் ஏற்படுகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே உடல் ஆரோக்கியத்தைப் போன்று நகங்களைப் பாதுகாக்க நாம் முயல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

நம்முடைய உடலில் முகம், சருமம், தோல், முடி போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கவனம் செலுத்தும் அதே வேளையில் நகங்களைப் பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. ஆனால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நகங்களும் தொடர்புள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோர்வாக தென்பட்டால் உடலில் இரத்தம் போதுமானதாக உள்ளதா? இரத்த சோகை போன்ற பிரச்சனை உள்ளதா? என கண்டறிய நகங்களைத் தான் முதலில் மருத்துவர்கள் பார்க்கும் வழக்கம் உள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் இல்லாமல் மற்ற நிறங்களில் இருந்தால் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்பதைக் கண்டறிய நகங்கள் உதவுகிறது.



மேலும் சமீப காலங்களாக பெண்கள் பலர் தங்களுடைய நகங்கள் எளிதில் உடைந்துவிடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளதாகவும் இதற்கு காரணம் என்ன காரணம்? என பல கேள்விகளை முன்வைப்பதாக கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி. இதுக்குறித்து பதிலளிக்கும் அவர், உடலுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படவில்லை என்றால் தான் நகங்கள் உடையக்கூடியதாகவும், மந்தமாக மாறுவதாகத் தெரிவிக்கிறார்.

நகங்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் தேவை. இல்லையென்றால் பெரும் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.. ஆனால் நம்முடைய நகங்களை எப்படி ஆரோக்கியமாக இருக்கிறது? எனக்கண்டறிவது பலருக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே இந்நேரத்தில் ஆரோக்கியமான நகங்கள் எப்படி இருக்கும்? என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கும் தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

ஆரோக்கியமான நகங்களைக் கண்டறியும் முறை:

நகரங்கள் வழக்கமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் ஆரோக்கியமாக உள்ளது என அர்த்தம்.

நடுவில் சற்று உயர்ந்து, பின் நுனியில் சற்று கீழை வளைந்திருக்கும். நாம் நெயில் கட்டரைப்பயன்படுத்தினால் தான் நம்முடைய நகங்களை வெட்ட முடியும்.

நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

நம்முடைய விரல்களுக்கு பாதுகாப்பாக நகங்கள் உள்ளன. ஆனால் சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவற்றின் நிறம், அமைப்பு போன்றவை மாறுவது உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாவதைக் குறிக்கிறது.

தைராய்டு பிரச்சனைகளுக்கும் நகங்களுக்கும் தொடர்புள்ளது. கால்சியம் மற்றும் புரதம் இல்லாத போது நகங்கள் வலிலை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முகர்ஜி.




நகங்களைப் பாதுகாக்கும் முறை:

நம்முடைய நகங்கள் உடையாமல் இருப்பதற்கு வெந்தயம், கேப்பை, மீன் மற்றும் இலைக்காய்கறிகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். முட்டைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்களுடைய நகங்களுக்கு உடையக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில், கைகளை அதிக நேரம் ஈரமாக வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். தினமும் பால், காய்கறிகள் மற்றும்ம் கால்சியம் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக நகம் என்பது விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானதாக உள்ளது. எனவே நம்முடைய நகங்களை எப்போதும் பாதுகாப்பாகவும், அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment