நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா.? அதிக பணத்தில் வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புகிறீர்களா.? ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசையா.? இந்த கேள்விகளுக்கு மாற்று கருத்து இல்லாமல் ஆம் என்ற பதில் தான் பெரும்பாலும் வரும்.
ஆனால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் பலர், தங்கள் வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களுக்கும் பணத்தை ஆடம்பரமாகச் செலவழிப்பதை விட, அதை பாதுகாப்பது மற்றும் சேமிப்பதன் மதிப்பை அறிவார்கள். நீங்கள் நினைப்பது போல எல்லா கோடீஸ்வரர்களும் ஆடம்பர பொருட்கள், தனியார் விமானங்கள், ஆடம்பர அல்லது சொகுசு கார்கள் போன்றவற்றுக்காக தங்கள் பணத்தை செலவழிப்பதில்லை. மாறாக பணத்தை எப்படி, எதற்காக செலவழிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்,குறிப்பாக ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்கள். ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்களிடமிருந்து நீங்கள் கற்று கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...
அதி ஆடம்பர வாழ்க்கையை தவிர்க்க வேண்டும்:
நீங்கள் இப்போது ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் சரி லட்சாதிபதியாக இருந்தாலும் சரி எப்போதுமே மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழாமல் இருப்பது நல்லது. அதிலும் நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள் என்றால் ஆடம்பர வாழ்க்கை என்பதை முற்றிலும் ஒதுக்கி வைப்பது நல்ல முடிவாக இருக்கும். இதுவே பல ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்களின் கருத்து.
செலவுகளை கண்காணிக்க வேண்டும்:
உங்களிடம் அளவில்லா பணம் இருக்கிறது என்றால் அதை கணக்கு பார்க்காமல் கண்டமேனிக்கு செலவு செய்யவே தோன்றும். இது இயல்பு என்றாலும், உங்கள் செலவுகளைக் கண்காணித்து, நிலையான வரவு - செலவு திட்டத்தை பின்பற்றுவது அவசியம். இந்த பழக்கம் நீங்கள் முக்கியமான ஒன்றை வாங்க திட்டமிடும் போது அல்லது முக்கிய காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
உங்கள் திறன்களில் முதலீடு..
உங்களிடம் ஒரு குறிப்பிட்ட ஸ்கில், மைன்ட்செட் மற்றும் பிரில்லியன்டாக செயல்படும் திறன்கள் இருந்தால், உங்களுக்கான சிறந்த எதிர்காலத்திற்காக அவற்றில் முதலீடு செய்யலாம். சிறந்த கல்வி பட்டங்கள் பெற மற்றும் நிலையான நிதி நிலைமையுடன் வாழ்க்கையை கழிக்க இது உதவும்.
நெருங்கிய உறவின் ஆதரவு:
பல மில்லியனர்கள் தாங்கள் இந்த அளவு உச்சம் தொட்டதற்கு தங்கள் மனைவி அல்லது பார்ட்னரின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்து உள்ளனர். எனவே கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அல்லது தற்போது கோடீஸ்வரராக இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்கள் இருப்பது பணத்தை விட போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டலை தரும்.
இலக்குகளில் கவனம்..
வாழ்வில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டம், செல்வசெழிப்பு மற்றும் மிக மகிழ்ச்சியான கலர்ஃபுல் வாழ்வை வாழ உங்கள் இலக்குகள் மீதான கவனம் பெரிதும் உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஓய்வும் அவசியம்:
நிறைய பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறீர்கள் என்றால் சில சம்யங்களில் ஓய்வு என்பதும் அவசியமாகிறது. பணத்தை சம்பாதிக்க அல்லது சேமிக்க எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ உங்கள் வாழ்க்கையை வேடிக்கையாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வாழ்வில் சமநிலை என்பது முக்கியமான ஒன்று.
0 Comments:
Post a Comment