மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் - மருத்துவர் டிப்ஸ் - Agri Info

Adding Green to your Life

August 10, 2022

மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் - மருத்துவர் டிப்ஸ்

 மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள்.



நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும்.

மீன் எண்ணெய்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்களைச் சுற்றியுள்ள மென்சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன. மூளை செல்கள் எனப்படும் நியூரான்கள் உருவாகவும் இவை உதவுகின்றன.

முழுத் தானியங்கள்: உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல்பட ஆற்றல் தேவை. இதேபோல், மனித மூளைக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் வடிவில் ஆற்றல் தேவைப்படுகிறது, இது கவனக்குவிப்பையும் அறிதல் உணர்வையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் முழுத் தானியங்கள் சிறந்த உணவுப் பொருட்கள்.

மூளையின் ஆரோக்கியம் முக்கியம்: மூளை என்பது மனித உடலின் ஒரு முக்கிய உறுப்பு. மற்ற உறுப்புகளைப் போல அதற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் எரிபொருள் தேவை. மூளையைக் கூர்மையாக்கவும், அறிதல் உணர்வைச் சரியான வகையிலும் வைத்திருக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன் எண்ணெய், புரோக்கோலி, கொட்டைப் பருப்புகள், பரங்கி விதைகள், காலிஃபிளவர், பழுப்பு அரிசி, முழுத் தானியங்கள், வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கப் பயன்படும்.

வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும். எனவே, மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment