நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட உட்காரும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோம். சாப்பிடும் போது காரம் எடுப்பது உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு சில வாய் தண்ணீர் குடிப்பது பரவாயில்லை..
ஆனால் உணவின் போது அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று நம்பப்படுகிறது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள். ஆனால் உணவின் போது தண்ணீர் குடிப்பது சரியா..?
உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லையா என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீர் மற்றும் பிற திரவங்கள் அருந்தும் போது செரிமான சக்தியை சிறிது நேரம் குறைக்கின்றன அதாவது செரிமானத்தை கடினமாக்குகின்றன. உணவின் போது தண்ணீர் குடிப்பது வாயில் உமிழ்நீரின் அளவைக் குறைப்பதில் இருந்து செரிமானத்தை பாதிக்க தொடங்குகிறது. குறைவான உமிழ்நீர் வயிற்றுக்கு பலவீனமான சிக்கனல்களை அனுப்புகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவும் இரைப்பை சாறுகள் (gastric juices) மற்றும் என்சைம்களின் வெளியீட்டை பாதிக்கிறது.
தவிர சாப்பிடும் போது தண்ணீர் அல்லது பிற திரவங்களை குடிப்பதால் மென்று சாப்பிடும் பழக்கத்தில் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. சாப்பிடும் போது ஒரு கிளாஸ் தண்ணீரைர் பருகுவது உங்களை மெதுவாக்குவதுடன் உணவை மென்று திங்காமல் முழுவதுமாக விழுங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்க கூடாது என்பது ஒரு பொது விதி. ஏனென்றால் திரவமானது நேரடியாக குடலுக்குள் சென்று, அனைத்து செரிமான நொதிகளையும் (digestive enzymes) நீக்கி, செரிமான சக்தியை பாதிக்க செய்கிறது.
சாப்பிடும் போது இடையில் ஏன் எதையும் குடிக்க கூடாது?
எடை அதிகரிக்கும்..
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாக கூறப்படுவது உடல் எடை அதிகரிப்பு. உணவின் போது பருகும் தண்ணீர் அல்லது திரவத்தால் இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பு உருவாகி, பின் அது உடலில் சேமிக்கப்படுகிறது. உடலால் உணவு நன்றாக ஜீரணிக்க முடியாமல் போனால் அது கொழுப்பாக மாறி உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்கும், இதற்கு உணவின் போது குடிக்கப்படும் தண்ணீர் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.
இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும்..
சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பது அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதிக தண்ணீர் அல்லது திரவம் gastric juices-களை நீர்த்து போக செய்து, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நமது உடலில் செரிமானமாகாத உணவுகள் இருக்கும் போது ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
இன்சுலின் அளவு கூடுகிறது..
ரத்த சர்க்கரை அளவையும், உடலில் கொழுப்பு சேமிப்பையும் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும். எனவே உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இதனால் உடல் எடை அதிகரிக்கும். இது தண்ணீருக்கு மட்டுமல்ல, உணவோடு ஜூஸ் அல்லது சோடா குடிப்பதும் இன்சுலின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உமிழ்நீர் அளவில் மாற்றம்..
செரிமானத்தின் இன்றியமையாத அங்கம் உமிழ்நீர். இது உணவாயு உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.
No comments:
Post a Comment