Filter Water VS HotWater எந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லது? - Agri Info

Adding Green to your Life

August 1, 2022

Filter Water VS HotWater எந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லது?

 மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக தண்ணீர் இருக்கிறது, நீரை அமிர்தமாகவும் கருதுகின்றனர் அந்தளவுக்கு நீர் ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது.  ஆனால் இன்றைய காலகட்டத்தில்  மக்கள் தொகைச் சுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்கள் குறைதல் போன்ற காரணங்களால் சுத்தமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது. 

 அசுத்த நீரை பருகுவதால் ஜலதோஷம், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பல வியாதிகள் வருகிறது.  சிலர் பில்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றனர், சிலர் சூடு தண்ணீரை பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்த இரண்டு தண்ணீரில் எது நமக்கு நனமையளிக்கிறது என்பதை பற்றி இங்கே காண்போம்.

  வீடுகளில் அல்லது தெருக்களில் உள்ள குழாய்களில் வரும் நீரை குடிப்பதில் நிறைந்துள்ள ஆபத்தை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  இதிலிருந்து வரும் நீரில் பாக்டீரியா நிறைந்த அசுத்தமான நீராக வருவதாக கருதப்படுகிறது.  

மேலும் இந்த நீரில் பாக்டீரியாவைக் கொல்ல குளோரின் மற்றும் ஃப்ளூரைடைப் பயன்படுத்தபடுகின்றன. இருப்பினும் நம் வீட்டிலுள்ள குழாய்களுக்கு உள்பக்கம் சுத்தம் இல்லாமல் இருக்கும் வாய்ப்புண்டு, மேலும் நீரை சேமித்து வைக்கும் இடங்களில் ஏதேனும் அசுத்தங்கள் கலக்க வாய்ப்புள்ளது.  

பண்டைய காலத்திலிருந்து சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான முறையாக கருதப்படுவது நீரை கொதிக்கவைக்கவும் செயல்முறைதான். 

 நீரை கொதிக்க வைக்கும்பொழுது அதிலுள்ள நச்சு பயக்கும் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன.  தண்ணீர் லேசான சூடு வந்தாலே அந்த ஆரோக்கியமானது என்று கருதுவது தவறு, அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத நீரில் பரவும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கிருமி நீக்கம் செய்ய, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு தண்ணீரை தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டும். அதை விட குறைவாக வேகவைத்தால், தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல.

சூடு தண்ணீருடன் ஒப்பிடும்போது, ​​ஃபில்டர் செய்யப்பட்ட தண்ணீர் குடிப்பது பாதுகாப்பான செயல்முறையாக  கருதப்படுகிறது. 

 அசுத்தமான அல்லது குழாய் நீரிலிருந்து அசுத்தங்கள், இரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்றி, நோய்க்கிருமி இல்லாததாக மாற்றுவதற்கு நீர் சுத்திகரிப்பு உதவும். 

 ஆர்ஓ முதல் யூவி நீர் சுத்திகரிப்பான்கள் வரை, தண்ணீரைச் சுத்திகரித்து குடிக்கக்கூடியதாக மாற்ற உதவும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன.

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment