புறக்கணிக்க கூடாத எலும்பு புற்றுநோயின் முக்கியமான 10 அறிகுறிகள் - Agri Info

Adding Green to your Life

September 8, 2022

புறக்கணிக்க கூடாத எலும்பு புற்றுநோயின் முக்கியமான 10 அறிகுறிகள்

 உடலில் இருக்கும் செல்கள் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வளரும் போது புற்றுநோய் ஏற்பட துவங்குகிறது. உடலின் எந்த பகுதியிலும் உள்ள செல்கள் புற்றுநோயாக மாறி பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவ கூடும்.

இந்நிலையில் புற்றுநோய்களில் மிகவும் அசாதாரண வகைகளில் ஒன்று எலும்பு புற்றுநோய். கட்டுப்பாட்டை மீறி எலும்பில் அசாதாரண செல்கள் வளரும் போது, எலும்பு புற்றுநோய் ஏற்படுகிறது.

எலும்புகளில் துவங்கும் புற்றுநோய்கள் பிரைமரி எலும்பு புற்றுநோய்கள் எனப்படும். ஆனால், இவ்வகையான புற்றுநோய்கள் எளிதில் ஏற்படக்கூடியவை அல்ல. அதே போல, பெரும்பாலான நேரங்களில் எலும்பில் காணப்படும் புற்றுநோய் உடலில் வேறு எங்காவது தொடங்கி பின் எலும்புகளுக்கு பரவுகிறது. இவை செகன்டரி எலும்பு புற்றுநோய்கள் என்று அழைக்கப்படுகிறது.

எலும்பு புற்றுநோய்கள் தீங்கற்றவை அதாவது பரவாதவை மற்றும் வீரியம் மிக்கவை (வெவ்வேறு உடல் பாகங்களுக்கு பரவக்கூடியவை) என்றும் வகைப்படுத்தலாம். எனினும் எலும்பு புற்றுநோய் இருக்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை மற்றும் அறிகுறிகளை ஒருவர் அறிந்து கொள்வது அவசியம்.

வலி மற்றும் வீக்கம்:

புற்றுநோய் கட்டி இருக்கும் பகுதியில் வலி என்பது மிகவும் பொதுவான அறிகுறி. ஆனால் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜில் எல்லா நேரத்திலும் வலி இருக்காது. இரவு நேரங்களில் அல்லது பாதிக்கப்பட்ட எலும்பை பயன்படுத்தும் போது, வாக்கிங் போகும் போது வலி மோசமாகலாம். ஆனால் ஒருகட்டத்தில் வலி நிலையானதாக மாறும். சில எலும்பு கட்டிகள் அந்த குதியில் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

நடப்பதில் சிரமம்:

பிறந்ததில் இருந்து ஒரு சிக்கலும் இன்றி நன்றாக நடக்கும் ஒருவர், காரணமேயின்றி திடீரென்று நடப்பதில் சிரமத்தை சந்தித்தால் எலும்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். ஏனென்றால் எலும்பு புற்று நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று இதுவாகும்.

அதீத சோர்வு:

ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்ந்தாலோ, இதுநாள் வரை செய்து வந்த அன்றாட வேலைகளை செய்ய கடினமாக உணர்ந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாதது போல அடிக்கடி உணர்ந்தாலோ முழுமையான சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதீத சோர்வு எலும்பு புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம்.

எலும்பின் மீது கட்டி:

எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளில் கட்டியும் ஒன்றாகும். சில எலும்பு கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் புற்றுநோய் செல்களை உடல் முழுவதும் பரவ செய்யலாம்.

பலவீனமான எலும்புகள்:

எலும்பு புற்றுநோய் எலும்புகளை வலுவிழக்க செய்யலாம். எனவே எளிதில் உடைந்து போகும் வகையில் எலும்புகள் மிகவும் பலவீனமடைவது எலும்பு எலும்பு புற்றுநோய் இருப்பதை குறிக்கலாம்.

மூட்டு விறைப்பு:

மூட்டு விறைப்பு காரணமாக ஒருவர் தனது அன்றாட நடவடிக்கைகளை செய்வதற்கு கஷ்டப்பட்டால், அது எலும்பு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முற்றிலும் நகர முடியாமல் போனால்..

ஒருவரால் சுத்தமாக நடக்கவோ அல்லது உட்காரவோ முடியாமல் போனால் உடனடியாக அவர் மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டு எலும்பு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

காய்ச்சல்:

எலும்பு புற்றுநோய் வெள்ளை ரத்த அணுக்களை அழித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த கூடும். எனவே காய்ச்சல் இதன் அறிகுறியாக இருக்கலாம். தொடர் காய்ச்சல் இருப்பின் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

திடீர் எடை இழப்பு..

பல வகை புற்றுநோய்களை போலவே, எலும்பு புற்றுநோய் சில நேரங்களில் திடீர் எடை இழப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தும். புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை விட அதிக ஆற்றலை கோரும் என்பதால், பாதிக்கப்படுபவர்களின் உடல் அதிக கலோரிகளை எரிக்கலாம். இது எடை இழப்பை ஏற்படுத்தும்.

அதிகம் வியர்ப்பது

உடல் புற்றுநோயை எதிர்த்து போராட முயற்சிப்பதாலோ, ஹார்மோன் மாற்றத்தாலோ அல்லது புற்றுநோய் காய்ச்சலை ஏற்படுத்தும் போது உடல் தன்னை தானே குளிர்விக்க முயற்சிக்கும் போதோ அதிக வியர்வை ஏற்படலாம் குறிப்பாக இரவில்.


Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment