ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் எப்படியாவது 10,000 அடிகளை நடந்து விட வேண்டும் என்பதுதான் அன்றைய இலக்காக இருக்கும். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. 10,000 அடிகள் நடப்பது பெரிய விஷயமில்லை. எப்படி நடக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறது ஆய்வு.
JAMA Internal Medicine and JAMA Neurology, இதழில் வெளியான ஆய்வில் 78 முதல் 500 பேரை நடக்க வைத்து அவர்கள் அணிந்திருந்த டிராக்கர்கள் மூலம் சோதனை செய்துள்ளது. ஆய்வில் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கிழக்கு டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் இனைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்கள்தான் தினம் 10,000 அடிகள் நடந்தால் மறதி நோய், இதய நோய் , புற்றுநோய் மற்றும் இறப்புக் காரணமாக இருக்கும் அத்தனை நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும் என்று கண்டறிந்தனர். ஆனால் அந்த 10,000 அடிகளானது சுருசுருப்பாகவும், வேகமாகவும் இருந்தால் மட்டுமே அந்த நன்மைகளை பெற முடியும் என்று அடிக்கோடிட்டு விளக்கியுள்ளனர்.
”இன்றைய டெக்னாலஜி யுகத்தில் நம் ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஆப்ஸ் மூலமாக தினசரி எவ்வளவு அடிகள் நடந்திருக்கிறோம், எவ்வளவு கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறோம் என்பதை எளிதாக கண்டறிய முடிகிறது. அதை வைத்தே 10,000 அடிகளை நடந்துவிட்டால் அன்றைய இலக்கை முடித்து விட்ட திருப்தியை கொள்கின்றனர். ஆனால் அந்த 10,000 அடிகளை வேகமாக நடக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை” என்கிறார் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் இம்மானுவேல் ஸ்டாமடாகிஸ்.
இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு 3800 அடிகளை ஆக்டிவாக நடந்தால் 25% மறந்தி நோயை தவிர்க்கலாம் என்கிறார் கிழக்கு டென்மார்க் பல்கலைக்கழக பேராசிரியர் போர்ஜா டெல் போசோ குரூஸ்
மேலும் அந்த ஆய்விலிருந்து சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் சில....
- ஒவ்வொரு 2000 அடிகளுக்கும் சீக்கிரமே இறக்கும் அபாயத்தை குறைக்க முடியும். அப்படி 10,000 அடிகளுக்கு 8 முதல் 11 சதவீதமாக குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்திற்கும் பொருந்தும்.
- ஒரு நாளைக்கு அதிக அளவிலான ஸ்டெப்ஸ் நடப்பது அனைத்து வகையான மறதி நோய் அபாயங்களையும் குறைக்க உதவும்.
- 9800 அடிகள் நடப்பது 50 சதவீதம் டைமென்ஷியா என்னும் மறதி நோய் அபாயத்தை குறைக்கலாம். 3800 அடிகளாக இருந்தால் 25% குறைக்கலாம்.
பொதுவாகவே கார்டியோ ஆக்டிவிடி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சமநிலை செய்யவும், கெட்ட கொழுப்பை குறைப்பதும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், பதட்டத்தை குறைக்கவும் , இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடைப்பயிற்சி என்பது சிறந்த உடற்பயிற்சி என்கிறார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் வாழ்க்கை முறை நிபுணர் கரிஷ்மா சாவ்லா.
எவ்வளவு தூரம் நடப்பது சிறந்தது..?
ஆக்டிவாக நடந்தா ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது போதுமானது என நிதி பஜாஜ் குப்தா கூறியுள்ளார். இவர் ஃபிசியோதெரபிஸ்ட். இதுவே நீங்கள் சைக்ளிங் செல்கிறீர்கள் எனில் நடைப்பயிற்சியை காட்டிலும் கூடுதல் நன்மைகளை பெறலாம் என்கிறார். அதாவது இதயத்தின் தசைகள் சீராகும், எலும்புகளின் உறுதி நிலையாக இருக்கும் என்கிறார்.
நொய்டா உடல் அறிவியலாளட் வருண் ரத்தன் 5.8 உயரம் கொண்ட ஒரு ஆண் 75 கிலோ எடை இருக்கிறார் எனில் ஒரு நிமிடத்திற்கு 3 கலோரிகள் குறைக்கலாம் என்கிறார். ஆனால் அவர் ஒரு மணி நேரத்திற்கு 3.2 கிலோமீட்டர் வேகத்திற்கு நடக்க வேண்டும் என்கிறார். 5 கலோரிகள் குறைக்க வேண்டுமெனில் ஒரு மணி நேரத்திற்கு 5.6 கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டும். 30 நிமிடத்திற்கு 3.2 கிலோமீட்டர் நடந்தால் ஒரு மணி நேரத்திற்கு 90 கிலோரிகள் வரை குறைக்கலாம். ஆனால் 1 மணி நேரத்திற்கு 5.6 கி.மீ எனில் 150 வரை குறைக்கலாம் என்கிறார்.
எனவே நீங்கள் நடக்க ஆரம்பிக்கிறீர்கள் எனில் உடனே வேகத்தை அதிகப்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். அதேசமயம் உங்கள் உடலை வருத்திக்கொண்டும் நடக்கக் கூடாது. உங்களுக்கு சௌகரியமான வேகத்தில் நடப்பதும் அவசியம் என்கிறார் வருண்.
No comments:
Post a Comment