குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 பதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர் கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. . 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான அட்டவணையில் குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment