நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதன் பயன் தான் கண்பார்வை குறைபாடு பிரச்சனை என்பது அவர்களுக்கு வயதாகும் போது தான் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு மாறி வரும் உணவு முறையால் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் பணிக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் கண்பார்வை குறைபாடு பிரச்சனை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சிறு வயதில் இருந்தே கண்ணாடி போட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கண்கள் இல்லை என்றால் எதுவுமே நம்மால் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு கண்களின் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எத்தனை தான் கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வைத்தியம் இருந்தாலும் அதெல்லாம் தற்காலிகத் தீர்வு தான். நிரந்த பலன்களைப் பெற வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே கண்பார்வை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இந்நேரத்தில் கண்களின் பார்வை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப்பொருள்களின் லிஸ்ட் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப்பொருள்கள் :
கீரைகள்: கண் நல்லா தெரியனும்னா கீரையை சாப்பிட வேண்டும் என்ற வார்த்தையை சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்தளவிற்கு கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.
கீரைகள்: கண் நல்லா தெரியனும்னா கீரையை சாப்பிட வேண்டும் என்ற வார்த்தையை சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்தளவிற்கு கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.
சர்க்கரை வள்ளக்கிழங்கு : இதில் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஒருவரின் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய மற்றும் மேம்படுத்துவதற்கு உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.
மாம்பழம் மற்றும் பப்பாளி: மாம்பழம் மற்றும் பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது.
செர்ரிகள்: செர்ரிகளில் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு தேவையான வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் செர்ரி பழங்களை அதிகளவில் உட்கொள்ளலாம். குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் கண்புரையைத் தடுக்கும் என்றும் பல ஆய்வுகள் கூறுகிறது.
இது போன்று பீச், தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள், பாதாம் பருப்பு, நெல்லிக்காய், எலுமிச்சை, மீன்கள், பயறு வகைகள், அதிக நீர் அருந்துதல் போன்றவற்றை மறக்காமல் நீங்கள் உணவு முறையில் பின்பற்ற வேண்டும். நிச்சயம் உங்களின் கண்கள் உள்பட உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையக்கூடும்.
ஆரோக்கியம் நிறைந்த உணவுப்பொருள்களை உங்களது உணவு முறையில் பயன்படுத்தினாலும் அயராது உழைக்கும் உங்களது கண்களுக்கு சற்று ஒய்வு கொடுப்பது அவசியமான ஒன்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும் வேலைக்கு இடையில் சுமார் 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கண்களுக்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுங்கள். மேலும் அதிகளவு தண்ணீர் அருந்துவதும் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
No comments:
Post a Comment