இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக இந்த முதுகு வலி உள்ளது. இது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதுடன், சின்ன சின்ன விஷயங்களையும் செய்ய முடியாமல் தடுத்து மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவ்வாறு நீங்கள் நாள்பட்ட முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தலோ அல்லது முதுகு வலி வருவதற்கான ஏதாவது அறிகுறிகள் ஆகியவை தென்பட்டாலோ அதை எவ்வாறு கண்டறிவது என்றும், அவ்வாறு கண்டறிந்த பின்பு அதற்கு எவ்வாறு சிகிச்சை மேற்கொள்வது என்பதை பற்றியும் இங்கு நாம் பார்க்கலாம்.
இதை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறார் எலும்பியல் நிபுணரான டாக்டர். ஹிமான்ஷு பெண்ட்ரே.
முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்:
இது பொதுவாக வயதாகும்போது இயற்கையாகவே ஏற்படும் ஒன்று தான். நம்முடைய முதுகுத்தண்டின் கீழ் பக்கத்தில் உள்ள குருத்தெலும்பானது அதன் வலிமையை இழக்கும் போது அல்லது அதன் தடிமன் ஆனது ஊட்டச்சத்து குறைபாடினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலோ அதன் மீது அதிகபடியான அழுத்தம் ஏற்படும்போது அது முதுகுத்தண்டில் வலியை ஏற்படுத்துகிறது.
மேலும் முதுகு வட்டெலும்பு, தன்னுடைய இடத்திலிருந்து சற்று விலகி செல்வதினாலும், அந்த எலும்பு பகுதியில் ஏற்படும் வீக்கத்தினாலும் மையோபேசியல் பெயின் சிண்ட்ரோம்(Myofascial pain syndrome) எனப்படும் நோய் ஏற்பட்டு அது தசைகளில் வலியை உண்டாக்கும். இதனாலும் நமக்கு முதுகு வலி ஏற்படும்.
பெரும்பாலான மக்களுக்கு முதுகுப் பகுதியில் ஏற்படும் எதிர்பாராதவிதமான காயங்களினாலும் அல்லது சில நேரங்களில் கீழே விழுவதினாலும் எலும்பு முறிவுகள் மற்றும் தசை பிடிப்புகளினாலும் அவர்கள் முதுகு வலியை அனுபவிக்கலாம். அதிக கனமான பொருளைத் தூக்கும் போதும் முறையற்ற கோணத்தில் சாய்ந்து நீண்ட நேரத்திற்கு அமர்வது அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்யும்போது அவை நேரடியாக முதுகுத்தண்டில் தாக்கத்தை ஏற்படுத்தி தாங்க முடியாத வழியை உண்டாக்கலாம்.
அறிகுறிகள்:
ஆரம்பத்தில் முதுகு பகுதியில் லேசான வலி ஏற்படுவது உடல் எடை குறைதல் காய்ச்சல், முதுகு பகுதியில் வீக்கம் ஆகியவையும் ஏற்படலாம். இது நாளடைவில் தாங்க முடியாத முதுகு வலியையும், காலுக்கு கீழே வலியையும் ஏற்படுத்தும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அசவுகரியத்தையும் உண்டாக்குவதோடு உடல் சோர்வையும் அதிகமாக ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
சிகிச்சை முறை:
மருந்து மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் நாம் இதை குணப்படுத்தலாம். பல நேரங்களில் மருந்துகளோடு சரியான முறையில் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதும் இதனை பெரும் அளவில் குணப்படுத்தும். கை கால்களை நீட்டி தசைகளுக்கு பயிற்சி அளிப்பதும் உடற்பயிற்சி செய்வதும் நம்முடைய உடலின் நரம்பு மண்டலங்களையும் தசைப்பகுதிகளையும் வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதும், எப்போதும் சரியான ஒரு உடல் தோரணையில் நடப்பதும், யோகாசனம் ஆகியவையும் முதுகு வலியை பெரும் அளவில் குணப்படுத்தும்.
No comments:
Post a Comment