நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் தினசரி வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து உள்ளார்.
இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டின் கேப்ஷனில் "நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்! ஆனால் நீங்கள் உண்மையில் தண்ணீரின் நன்மைகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்பினால், சூடான நீர் நல்ல வழி" என்று குறிப்பிட்டு உள்ளார்.
மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் : குளிர் காலம் கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் மூக்கு அடைப்பது மிகவும் சங்கடமான ஒன்றாக இருக்கும். ஒரு கப் சூடான தண்ணீர் குடிப்பது மூக்கடைப்பை குறைக்க உதவுகிறது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் : மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று உடல் நீரிழப்பை சந்திப்பது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சுடு தண்ணீரைக் குடிப்பது குடல்களை மீண்டும் சாதாரணமாக இயக்க ஒரு சிறந்த வழி என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார்.
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : டாக்டர். நித்திகாவின் கூற்றுப்படி தினசரி வெந்நீரைக் குடிப்பது நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் : மாதவிடாயின் போது சீரான இடைவெளியில் வெந்நீரைக் குடிப்பதன் மூலமும் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நித்திகா.
சரும பராமரிப்பு : டாக்டர் நித்திகாவின் கூற்றுப்படி, தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது சருமம் வயதாவதை தடுக்கிறது மற்றும் முகப்பரு, தழும்புகளை நீக்குகிறது.
செரிமான மேம்பாடு : காலை நேரங்களில் உணவிற்கு முன் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார். இப்பழக்கம் வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது.
உடலை டீடாக்ஸ் செய்கிறது : சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் ஃபோர்ஜின் எலமென்ட்ஸ் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் அமைப்பை சுத்தப்படுத்துகிறது என்றும் கூறி இருக்கிறார் டாக்டர் நித்திகா.
No comments:
Post a Comment