சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..? - Agri Info

Adding Green to your Life

September 22, 2022

சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?

 

சிறுநீரின் நிறம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய பல தகவல்களை உணர்த்தும். எந்த ஒரு நோயின் தீவிரம் அதிகரித்தாலும், அதன் விளைவு சிறுநீர் அல்லது சிறுநீரின் நிறத்தில் தெரிய ஆரம்பிக்கும். சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் நிறம் மாறலாம். உடலில் ஒரு அன்க்ரோமிக் நிறமி உள்ளது. இதன் காரணமாக சிறுநீரின் நிறம் உருவாகிறது. இந்த நிறமி அதிகமாக செறிவூட்டப்பட்டால், சிறுநீரின் நிறம் மாறும்.

பொதுவாக சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் மற்றும் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் உடலில் அதிக அளவு திரவம் இருந்தால் அது சிறுநீரின் நிறத்தை மாற்றுகிறது. மயோகிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி சிறுநீர் எந்தெந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து என்று பார்க்கலாம்.

எந்த சூழ்நிலைகளில் ஆபத்து..?

சிவப்பு நிறம் - சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம். இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி இல்லாமல், சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தால், அது மேலும் கவலைக்குரிய விஷயம். அத்தகைய சூழ்நிலையில், புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

அடர் மற்றும் ஆரஞ்சு நிறம் - சிறுநீரின் நிறம் அதிக கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ இருந்தால் அதுவும் நோயின் அறிகுறியாகும். குறிப்பாக மலத்தின் நிறமும் மாறியிருந்தால் கடுமையான கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.

எப்படி கண்டுபிடிப்பது..?

பொதுவாக, உடலில் உள்ள திரவத்தை பொறுத்து சிறுநீரின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. உடலில் திரவம் எவ்வளவு அதிகமாக செல்கிறதோ, அவ்வளவு அதிகமாக சிறுநீரில் மஞ்சள் நிறமியை நீர்த்துப்போகச் செய்யும். அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் தெளிவாகும். குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறத்துடன் சேர்ந்து கெட்டியாக மாறும். எனவே, சிறுநீரின் நிறம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களை பொறுத்தது. பீட்ரூட், ஜாமூன் அல்லது சில மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரின் நிறம் பச்சை, மஞ்சள், நீலம் போன்றவையாக இருக்கலாம்.

எனவே, ஒவ்வொரு முறையும் சிறுநீரின் நிறம் மாறும்போது ஏதாவது ஒரு நோய் வரும் அபாயம் உள்ளது. ஆம், நிறமி இல்லாத உணவை சாப்பிடாமலே அல்லது குடிக்காமலே சிறுநீரின் நிறம் அசாதாரணமாக மாறினால், அது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்..?

சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரகத்தில் கல் இருந்தாலோ, சிறுநீரின் நிறம் ரத்தத்தின் நிறம் போல் இருக்கும். பொதுவாக, சிறுநீர் கழிக்கும் போது வலி இருக்கும், ஆனால் வலி இல்லாமல் சிறுநீரின் நிறம் இரத்தமாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாகும்.

சில நேரங்களில், சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று காரணமாக, சிறுநீரின் நிறமும் நீலமாக மாறும். இது ஹைபர்கால்சீமியா அல்லது நீல டயபர் ( blue diaper syndrome ) நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரின் நிறம் கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ மாறினாலும், அது ஒரு எச்சரிக்கை அறிகுறிதான். இது போன்ற சூழ்நிலைகளில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அனுகுவது அவசியம்.


Click here to join whatsapp group for daily health tip 

No comments:

Post a Comment