பிளாஸ்டிக்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு! - Agri Info

Adding Green to your Life

September 28, 2022

பிளாஸ்டிக்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்டஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா? உங்கள் வணிகத்தில் குறைந்த விலையில் பிளாஸ்டிக்- அல்லாத மாற்றுப் பொருட்களை அடையாளம் காண வேண்டுமா?

அப்படியென்றால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

இன்று, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பான தேசிய கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். 150 அரங்குகள்  கொண்ட இந்த கண்காட்சியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார்/அரிசி- தவிடு/அரிசி- மட்டை/விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், துணி/சணல் பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள்  தங்கள் தயாரிப்புகளையும், இயந்திரங்களையும் காட்சிப் படுத்தி வருகின்றனர். மேலும், இறுதி நாளை, தொழில்முனைவோருக்கான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும்,  தொழில் முனைவோர்களுக்கு நிதி ஆதாரங்களை பெறும் வகையில் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேசிய கண்காட்சிக்கு  அனுமதி முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில் முனைவோர்களும், ஹோட்டல், சினிமா, கல்யாண மண்டபம்  போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில்  கலந்து கொண்டு பலனடையலாம்.

முன்னதாக, தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019 முதல் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" எனும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment