சர்க்கரையில் அதிக கலோரிகள் இருக்கின்றது. சர்க்கரை நிறைய சாப்பிட்டால் அது உடலுக்கு பாதிப்பாக இருக்கும். சர்க்கரையை சாப்பிடக்கூடாது. சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினால் சர்க்கரை அளவு மற்றும் கலோரிகளும் அதிகரிக்காது என்ற பலரும் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் பல மடங்கு ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் காபி அல்லது தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்தினால் அது உங்கள் இதயத்தை பாதிக்கலாம் என்பதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.
ஃபிரான்சில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சம் பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் விவரம் BMJ என்ற ஜர்னலில் வெளியானது. செயற்கை இனிப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகரிக்கிறதா என்பதை பற்றிய இந்த ஆய்வை சோர்போன் பாரீஸ் நார்ட் பல்கலைக்கழகம் நடத்தியது.
ஆய்வில் பங்கேற்றவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆய்வின் கணக்கிடப்பட்டன. பானங்கள், டேபிள் டாப் இனிப்புகள் மற்றும் பால் பொருட்கள் என்று அனைத்து உணவுப் பொருட்களுமே இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டது. என்ன சாப்பிடுகிறார்கள் என்பதன் அடிப்படையில் இதய நோய் பாதிப்பு அல்லது நோய்கள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களின் தோராயமான வயது 42 மற்றும் இவர்களில் ஐந்தில் நான்கு பங்கேற்பாளர்கள் பெண்கள்.
இந்த ஆய்வு 9 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரையுமே ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்களில் 1502 பங்கேற்பாளர்களுக்கு கார்டியோவாஸ்குள்ளார் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதில் மாரடைப்பு, பக்கவாதம், இஸ்கேமிக் அட்டாக், ஆன்ஜைனா ஆகியவை அடங்கும்.
செயற்கை இனிப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஒன்பது சதவீதம் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மற்ற உடல்நல பாதிப்புகளை கணக்கிடாமல், செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதை மட்டும் எடுத்துக் கொண்டால், செரிப்ரோ வாஸ்குலர் நோய்கள் உண்டாவதற்கான அபாயம் 18 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சுக்ரலோஸ், ஏஸ்ஸல்ஃபேம் பொட்டாசியம், அஸ்பார்டெம் ஆகிய செயற்கை இனிப்புகள் செரிப்ரோ வாஸ்குலர் மற்றும் கொரோனரி ஆர்ட்டரி நோய்கள் உண்டாவதற்கான அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
செயற்கை சுவை மணம் மற்றும் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்களால் உணவு வழியாக பானங்கள் வழியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை சர்க்கரைக்கு மாற்றான ஆரோக்கியமான மாற்றாக எப்பொழுதுமே கருதக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் இந்தியாவின் இதய நோய் நிபுணர் மற்றும் பிரசிடெண்ட் ஆன மருத்துவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி ‘செயற்கையான சரிவூட்டப்பட்ட உணவுகள், ரசாயனங்கள் ஆகியவை எப்பொழுதுமே இதயத்துக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். டிரான்ஸ்ஃபாட் என்பவை உணவின் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மையை அதிகரிக்கும். எனவே, டிரான்ஸ்ஃபாட் பயன்படுத்தப்பட்ட உணவுகள் மனிதர்களின் ஆயுளை குறைக்கும்; இதேபோலத்தான் செயற்கை இனிப்புகளும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளபடி செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் சுருங்கி சரியாக செயல்படாமல் போகும் அபாயம் இருக்கிறது.
No comments:
Post a Comment