சாட்-பக்கோடாக்கள், பூரி-கச்சோரிஸ் என வறுத்த காரமான உணவுகளை சாப்பிட மிகவும் சுவையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே என்னதான் எண்ணெய் உணவின் சுவையை அதிகரித்தாலும் உடல் நலம் கருதி குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துவது அவசியம்.
காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு எந்த உணவாக இருந்தாலும் எண்ணெய் இல்லாமல் அந்த உணவு சாத்தியமில்லை. சமையல் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, கொழுப்புகளின் களஞ்சியமாகவும் உள்ளது. இதனாலேயே உணவில் எண்ணெய்யின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் அளவு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் சரியான அளவு என்ன?
உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணெயின் ஊட்டச்சத்தும் முக்கியமானது. ஏனெனில் இது ஆரோக்கியமான தோல், முடி மற்றும் எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. Harzindagi.com குறிப்பிட்டுள்ள அளவுபடி, ஆரோக்கியமான உடலுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உட்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் எண்ணெயின் அளவைக் குறைக்கலாம். அதேபோல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
எப்படியெல்லாம் எண்ணெய் உபயோகத்தை குறைக்கலாம்..?
- எண்ணெயில் நன்கு வறுத்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
- ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் காய்கறிகளை சமைக்க முயற்சி செய்யுங்கள்.
- வேகவைத்த உணவை உண்ணும் மாற்று வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
- சாலட்டின் சுவையை அதிகரிக்க ஆயில் டிரஸ்ஸிங் செய்வதை தவிர்க்கலாம்.
- சரியான எண்ணெய் பிராண்டுகளை தேர்வு செய்து பயன்படுத்தவும்.
0 Comments:
Post a Comment