நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோன் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..! - Agri Info

Adding Green to your Life

September 28, 2022

நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோன் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..!

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் இலவசமாக சில உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் வாங்க நேரிடுகிறது. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் அனைவர்களிடம் மொபைல் மற்றும் லேப்டாப், கணினி பயன்பாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கண் பார்வை இழப்பையும் நமக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குறிப்பாக வெயிலில் ஸ்மார்ட்போன்களை மக்கள் பயன்படுத்தும் போது, சூரிய ஒளிக்கதிர்களால் நேரடியாக இல்லாமல் போனின் திரை வழியாக பிரதிபலித்து கடுமையான விழித்திரை பாதிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது. மற்றும் கண்பார்வை முற்றிலும் தெரியாமல் போய்விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சமீபத்தில் இது தொடர்பாக மருத்துவர்கள் நடத்திய சோதனையில் வெயிலில் மொபைல் போன்களைப் பார்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்அனைவரையும் பாதித்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நேரம் வெயிலில் மொபைலைப் பயன்படுத்தும் போது சூரிய கதிர்களின் பிரதிபலிப்பால், விழித்திரையின் பின்புறத்தைப் பாதிக்கும் மாகுலர் டிஜெனரேஷன் என்றழைக்கப்படும் மாகுலோபதி என்ற நோய் பாதிப்பை அடைகின்றனர். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குருடர்களாக மாற மாட்டார்கள். அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை மொபைலிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியினால் ஆரம்பத்தில் தொலைவில் இருக்கும் பொருள்களின் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இப்பிரச்சனை 20 வயதாக இருந்தாலும் சரி 40 வயதாக இருந்தாலும் சரி அனைவரையும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மொபைல் போன்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் வெயிலில் அதிக நேரம் செல்போன்களை உபயோகிக்கக் கூடாது என அறிவுத்துகின்றனர் மருத்துவர்கள். இதோடு சூரிய கதிர்களை நேரடியாக பார்த்தால் தான் கண்பார்வை பிரச்சனை ஏற்படும் என்பதில்லை,. மொபைல் போன்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பார்க்கும் நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சற்று உங்களது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

செல்போன்களில் ஒளித்திரை நம் கண்களின் மட்டத்திற்கு மேல் இருக்கக்கூடாது. எப்போதும் கண்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்.

பகல், இரவு என உங்களது சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் ஒளித்திரையின் பிரைட்னஸை மாற்றி அமைக்க வேண்டும். இது கண்களைப் பாதுகாக்க உதவும்.

மொபைல் போன்களில் வீடியோக்களை அல்லது செய்திகளை ஆர்வத்துடன் பார்க்கும் போது கண் சிமிட்ட மறந்துவிடுகிறோம். கண்களில் உள்ள திரவம் தான் நம்முடைய கண்களைப் பாதுகாக்கிறது. கண்கள் வறண்டு போகும் போது வலி, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.

வெளியில் செல்லும் போது கண் நோய்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க பயனுள்ள சன்கிளாஸ்களை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயதானவர்கள் கண்களை ஆண்டிற்கு ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

மேற்கண்ட முறைகளில் பாதுகாப்போடு உங்கள் மொபைல் போன்களை நீங்கள் உபயோகித்த பின்னரும் கண்பார்வை பிரச்சனை, கண்களில் வலி இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip 

 

No comments:

Post a Comment