குரூப்4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனுடம் மேலும் சில தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.
22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு நடைபெற்று 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு முடிவுகளும் அப்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
No comments:
Post a Comment