Search

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

 வாக்கிங் என்பது உடல் எடையை குறைக்க மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் எளிதான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாக்கிங் போவதால் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளை பெற நன்றாக நடக்க கூடிய ஒரு நபர் தனது உடல் எடையை பெருட்படுத்தாமல் தினசரி சுமார் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

10,000 ஸ்டெப்ஸ் விறுவிறுப்பான வாக்கிங் அல்லது தினசரி 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட கூறுகிறார்கள் நிபுணர்கள். ஆனால் உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் வாக்கிங் போவதில் ஆர்வம் காட்டினாலும், 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் செல்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். பொதுவாக வாக்கிங் என்பது ஒரே ஸ்ட்ரெச்சில் செல்ல வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நேரத்தை அவரவர்க்கேற்ற மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஒருநாளில் இவ்வளவு தூரம் அல்லது நேரம் வாக்கிங் போகும் இலக்கை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

விறுவிறுப்பான வாக்கிங் செரிமானத்திற்கு உதவுவதோடு பெரிய நோய்க அபாயங்களில் இருந்து நம்ம பாதுகாக்கும். சரி, நீங்கள் 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் போக முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் அன்றாட வாழ்வில் இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

மாடிப்படிகளில் ஏறி செல்ல பழகுங்கள்: அலுவலகம் மற்றும் குடியிருப்பு என நாம் புழங்கும் பெரும்பாலான இடங்களில் லிஃப்ட் வசதி இருக்கிறது. 2 மாடிகள் ஏறி செல்ல வேண்டும் என்றால் கூட பலரும் படிகட்டுகளை பயன்படுத்தாமல், லிஃப்ட் பயன்படுத்துகிறார்கள். எனவே கூடுமான வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலுவலகம், அப்பார்ட்மென்ட் என லிஃப்ட் இருக்கும் இடங்களில் அதனை பயன்படுத்தாமல், படிகளில் ஏறி செல்லுங்கள். மேலும் படிக்கட்டுகளில் நடப்பது இதய உடற்பயிற்சிக்கான இலக்கை அடைய உதவும்.

45 நிமிடங்களுக்கு ஒருமுறை: பகல் நேரத்தில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை 3 - 5 நிமிடங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்கிங் செல்ல உங்கள் மொபைலில் ஒரு ரிமைன்டரை செட் செய்து கொள்ளுங்கள். அலாரம் அடித்தவுடன் அதை ஆஃப் செய்யாமல் என்ன வேலையாக இருந்தாலும் சில நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.

நண்பர் அல்லது செல்ல பிராணிகளுடன்... வாக்கிங் செல்ல சோம்பேறித்தனமாக இருக்கும் போது உங்கள் நண்பர் மற்றும் செல்ல பிராணிகளுடன் வாக்கிங் செல்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகாலை அல்லது மாலை நேரம் நண்பர்களுடன் நீங்கள் செல்லும் வாக்கிங் உங்களை உற்சாகமாக வைக்கும்.

பார்க்கிங்: நீங்கள் அலுவலகம், ஷாப்பிங் என வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் பைக் அல்லது காரை பார்க் செய்யும் போது சற்று தூரத்தில் நடந்து சென்று வாகனத்தை எடுத்து செல்லும் வகையில் பாதுகாப்பான இடத்தில பார்க்கிங் செய்யுங்கள். இந்த பழக்கம் வாகனத்தை விட்டு நீங்கள் செல்லும் போது மற்றும் வாகனத்தை எடுத்து செல்லும் போது நீங்கள் குறிப்பிட்ட தூரம் நடப்பதை உறுதி செய்கிறது.

லஞ்சிற்கு பிறகு குட்டி வாக்கிங்: பெரும்பாலான நிறுவனங்கள் மதிய உணவை சாப்பிட 30 - 45 நிமிடங்கள் இடைவேளை வழங்குகின்றன. இந்த இடைவேளையை வாக்கிங் செல்ல பயன்படுத்தி கொள்ளலாம். 20 நிமிடங்களுக்குள் மதிய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு, மீதி இருக்கும் இடைவேளை நேரத்தில் மிதமான வாக்கிங் செல்வது தினசரி வாக்கிங் இலக்கை அடைய உதவும்.

போன் பேசும் போது நடக்கலாம்: வேலை நேரத்தில் பெரும்பாலும் 8 - 9மணி நேரம் உட்கார்ந்தே இருக்கும் சூழலில், மொபைலில் பிறருடன் பேசும் போது படுக்கையில் படுத்து கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு பேசாமல் வீட்டிற்குள் அல்லது மாடியில் நடந்து கொண்டே பேசலாம்.


 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment