இன்றைய இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இரவு உணவுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.
டீ : பலருக்கும் சாப்பிட்ட உடன் டீ , காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அதை இரவிலும் கடைப்பிடிக்கிறீர்கள் எனில் அது தூக்கத்தை பாதிக்கும். டீ, காஃபி மட்டுமன்றி சாக்லெட், கோலா பானங்களை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றில் உள்ள கஃபைன் மூளையை பாதித்து உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். நீண்ட நேரம் விழிப்போடு வைத்திருக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் : ஒமேகா 3 போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். அப்படி நெய், வெண்ணெய் நிறைந்த உணவுகள், குக்கீஸ் போன்றவற்றை இரவு சாப்பிடுவதை தவிருங்கள்.
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் : பாஸ்தா, பிரட் என மைதா மாவை பிரதானமாக கொண்டு சமைக்கப்படும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை தூக்கமின்மையை பாதிக்கும். அதேசமயம் செரிமானத்தையும் குறைக்கும்.
வைட்டமின் குறைபாடு கொண்ட உணவு : எப்போதும் நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி சம அளவிலான ஊட்டச்சத்து உணவு இல்லை என்றாலும் தூக்கம் தடைபடும். எனவே வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை இரவிலும் உட்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் உட்கொள்ளுங்கள்.
காரமான உணவுகள் : மசாலா , கார உணவுகளை இரவில் உட்கொள்ளும்போது அது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வகையில் நெஞ்சு எரிச்சல், அஜீரணக்கோளாறு காரணமாகவும் உங்களுக்கு தூக்கம் தடைபடலாம்.
உணவுக்கு பின் இடைவேளை அவசியம் : பொதுவான இரவு உணவையே 9 மணிக்கு முன் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அப்படி சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரமாவது ஓய்வு எடுத்த பின் தூங்கச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் சாப்பிட்ட உடனே உறங்கச் சென்றால் புற்றுநோய் ஆபத்து கூட வரலாம் என ஆய்விலும் நிரூபித்துள்ளனர். எனவே மிதமான உணவு மட்டுமன்றி தூங்குவதற்கு முன் போதுமான இடைவேளையும் அவசியம்.
No comments:
Post a Comment