தலைமுடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புக்கள் !! - Agri Info

Adding Green to your Life

October 2, 2022

தலைமுடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புக்கள் !!

லைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.

குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும்.

நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.

வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.

தேங்காய் எண்ணெய், விளகெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும். பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.

கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும். 



Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment