துளசியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்பதால் தினமும் நம்முடைய உணவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் பூஜைக்காகவும் வைக்கும் மூலிகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது துளசி. இதோடு துளசியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால், துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் அனைத்தையும் மக்கள் மருந்தாகப் பின்பற்றி வருகின்றனர். இதோடு குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடல் நலத்தைப் பாதுகாக்க துளசி தேநீரை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
துளசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆயுளையும் நீட்டிக்கிறது. இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் தான் துளசியை “மூலிகைகளின் ராணி“ என்று அழைக்கின்றனர். எனவே இந்நேரத்தில் துளசியைக் குளிர்காலத்தில் மட்டும் தேநீருக்காக பயன்படுத்தாமல், அனைத்து நாள்களிலும் சாப்பிட்டு வரும் போது, பல உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
துளசி தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்:
துளசியில் சக்தி வாய்ந்த அடாப்டோஜெனிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதோடு மன அழுத்தத்தைக் குறைத்து மனத்திற்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. இதோடு இதில் உள்ள ஆன்டி வைரஸ்கள் இருமல்,சளி மற்றும் வைரஸ் காய்ச்சலுக்குத் தீர்வு காண்கிறது. மேலும் தொண்டைபுண் உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளிலிருந்து துளசியில் உள்ள ஆன்டிபாக்டீரியல்கள் நம்மைப் பாதுகாக்கிறது.
சுவாசப் பிரச்சனைக்குத் தீர்வு, சைனசிடிஸ் மற்றும் தலைவலியைக் குறைக்கவும் துளசி நமக்கு உதவியாக உள்ளது. இதோடு துளசி அல்லது துளசி சாற்றைத் தினமும் நம்மால் உட்கொள்ளும் போது நீரழிவு நோயை குணப்படுத்துவது முதல் சளித்தொல்லை, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் பணியை மேற்கொள்வதோடு உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே குளிர்காலத்தில் மட்டுமில்லாது தினமும் துளசி சாறைப் பயன்படுத்தி தேநீர் பருகும் போது உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது.
துளசி தேநீர் செய்முறை: முதலில்,துளசியின் 5-6 புதிய இலைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் 2-3 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் உடலுக்கு ஆரோக்கியமான துளசி தேநீர் ரெடியாகிவிடும். உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் துளசி தேநீரை எளிய முறையில் செய்துவிடலாம் என்றாலும், அதிக இரத்தப்போக்கு, அதிக பசி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் துளசி டீயை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதோடு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த துளசி செடியைத் தினமும் சாப்பிட்டு வந்தால், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இதோடு ஜீரண சக்தியை அதிகரித்து உடல் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் நீரழிவு மற்றும் சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டுவரும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment