எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க! - Agri Info

Education News, Employment News in tamil

October 31, 2022

எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க!

 இந்த விஷயம் நடக்கும், இதற்கு பாசிடிவ்வாக சிந்திக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் எளிது!  இயல்பாகவே நம்முடைய மனம் மற்றும் மூளை எதிர்மறையான விஷயத்தை கிரகித்துக்கொள்ளும்படி தான் படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் நடக்காது, இது கிடைக்காது என்று நெகட்டிவ் ஆன ஏதாவது ஒரு உணர்வு தோன்றினால் அந்த விஷயம் நடந்துவிடும். ஆனால் அதுவே ஒரு விஷயம் நடக்க வேண்டும், ஏதேனும் ஒன்று கிடைக்க வேண்டும், இந்த வாய்ப்பு என்னுடையது என்று பாசிட்டிவாக நினைக்கும் பொழுது அதை நாம் பாசிட்டிவ் ஃஅபர்மேஷன் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனம், நல்ல விஷயங்களை முழுமையாக நம்பாது.

இவ்வாறு எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை ஒரு நபரை அதிகமாக ஆட்கொள்கின்றன. இந்த எதிர்மறையான சிந்தனைகள் இயல்பாகவே நமக்கு உள்ளே ஊறிவிடுவதால் இதனை தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய செயல்களையும் பாதிக்கிறது.

நம்முடைய சிந்தனைகள் நம்முடைய உணர்வுகளை பாதிக்கிறது; நம்முடைய உணர்வுகள் நம்முடைய செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; நம் செயல்களில் ஏற்படும் தாக்கம் சிந்தனைகளை மீண்டும் பாதிக்கிறது. இது ஒரு முக்கோண சங்கிலியாக இது தொடர்ந்து வருகிறது. எனவே நம்முடைய செயலும் சிந்தனையும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று மன நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு கவனத்துடன் ஒரு வேலையை செய்து வரும் செய்து கொண்டிருக்கிறோம். சின்ன ஒரு கவனச் சிதறல் மூலம் ஏதாவது ஒரு நெகட்டிவ் ஆன ஒரு விஷயம் அல்லது மோசமான ஒரு அனுபவம் பற்றிய நினைவு வரும் பொழுது அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தி வேலையைத் தடை செய்யும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது என்பது நாம் இதையெல்லாம் சிந்திக்கவேண்டும் இதையெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று நேரடியான கட்டுப்பாட்டை விதிக்க முடியாது. ஆனால் நாம் எவ்வாறு சிந்திக்கிறோம், எந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள போகிறோம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள முடியும்.

அரைகுறை சிந்தனைகளை தவிர்ப்பது

எல்லாருமே எல்லா விஷயங்களிலும் தெளிவாக சிந்திக்க முடியாது. ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது, கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தி நம்முடைய சிந்தனைகளை ஒருங்கிணைத்து, அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் சவாலானது. ஏற்கனவே நாம் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் நம்முடைய மூளை நம்மை பாதுகாக்கும். உதாரணமாக நாம் ஒரு சவாலான ஒரு விஷயத்தை எதிர்கொண்டிருக்குறோம்; அதேபோல மற்றொரு சம்பவத்தை எதிர்கொண்டால், அதிலிருந்து நம்மை பாதுகாக்க மூளை நமக்கு வழக்கத்தை விட அதிகமாக பயத்தை ஏற்படுத்தும். எனவே, இவ்வாறு அரைகுறையாக ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால், அதிக அச்சம், எதிர்மறையான சிந்தனைகளை உண்டாக்கும்.

ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

குழந்தைகள் இடத்திலேயே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று கூறும் வழக்கமிருக்கிறது. பள்ளியில், படிப்பில், விளையாட்டில் என்று எந்த விஷயத்திலேயும் ஒருவரை ஒப்பிட்டு மற்றவருடைய திறனை தீர்மானிக்க கூடாது. ஒருவர் இப்படி நடந்து கொள்கிறார், நீ ஏன் இப்படி செய்யவில்லை என்று எந்த அடிப்படையிலும் கேட்கவே கூடாது. இவ்வாறு தொடர்ந்து மற்றவர்களுக்கு இதை சொல்வது மட்டுமல்ல, அதையே நாமும் செய்ய வேண்டும். நம்மை மற்றவருடன் ஒப்பிடும் பொழுது தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் நமக்கு திறமை இல்லையா என்ற சந்தேகமும் எழ தொடங்கும்.

ஒவ்வொரு நபரும் தனித்தன்மை வாய்ந்த திறன்கள் இருக்கின்றன. எனவே உங்களுடைய கடந்த காலத்தில் நீங்கள் எவ்வாறு இருந்திருக்கிறீர்கள் மற்றும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை மட்டும் கவனித்தால் போதும். உங்களையே நீங்கள் ஒரு போட்டியாளராக ஒப்பிட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.

உங்கள் பலம் மற்றும் திறமைகள் மீது கவனம் செலுத்துங்கள்

நம்முடைய குறைகளையும் பலவீனங்களையும் நாம் திரும்பத் திரும்ப நினைத்து கொண்டே இருக்கும் பொழுது எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாகத் தோன்றும். நெகட்டிவான எண்ணங்களை தவிர்ப்பதற்கு உங்களுடைய குறைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல் உங்களுடைய திறமைகள் என்ன, எதில் நீங்கள் சிறந்தவர் நீங்கள் செய்யும் எந்த விஷயம் சிறப்பாக இருக்கும் என்று உங்களுடைய பலத்தின் மீதும் திறமைகள் மீதும் கவனம் செலுத்துங்கள். இது வாழ்வில் உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

என்ன செய்ய முடியும் என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள் :  

எல்லோருக்குமே வாழ்வில் பல ஆசைகள், குறிக்கோள், லட்சியம் ஆகிய அனைத்துமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது எல்லாம் நியாயமே இல்லை, நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று அவர்களுக்கே தோன்றும். அவ்வாறு நீங்கள் நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களை உங்கள் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டாம். எதை உங்களால் உடனடியாக அல்லது சிறிது காலத்தில் செய்ய முடியுமோ அதை உங்கள் குறிக்கோளாக மாற்றி அதை நோக்கி செயல்படுங்கள். அதை அடைந்த பிறகு உங்களுடைய குறிக்கோளை பெரிதாக்கி கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோளாக இருந்தால், முதல் நாளிலேயே உங்களால் 10,000 அடிகள் நடக்க முடியாது. அல்லது முதல் ஓரிரு நாட்கள் நடந்தால் மூன்றாவது நாள் கால்கள் வீங்கி விடும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக முதல்நாள் 2000 படிகள், இரண்டாம் வாரம் 3000 படிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய இலக்கை அதிகரித்துக் கொள்ளலாம்.

தேவைப்பட்டால் உதவி பெறுங்கள்: 

ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சினைகள் அல்லது மன ரீதியான தொந்தரவுகள் காரணமாக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம் அல்லது நெருங்கியவரின் இழப்பு பிரிவு இடமாற்றம் ஆகிய பல விஷயங்களுமே எதிர்மறையான சிந்தனைகளை அதிகரிக்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாக தோன்றும் பொழுது மருத்துவரின் அல்லது மனநல ஆலோசகரின் உதவியை பெறுவதில் தவறில்லை.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment