என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதுவும் இந்தாண்டு தீபாவளி திருநாள் திங்கள் கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் விடுமுறை வருவதால் இப்பொழுதே எந்த இடங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பீர்கள். இன்னும் ப்ளான் போடவில்லை என்றால், இதோ உங்களுக்காகவே தென்னிந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் மலைவாசஸ்தலங்கள் என்னென்ன? எங்கு உள்ளது? என அறிந்துக்கொள்வோம்..
வாகமன்,கேரளா: கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில்மிகு மலைவாசஸ்தலம் தான் வாகமன். இந்த மலையின் உச்சியில் நின்று கேரளத்தின் அழகை ரசிக்க ஏற்ற மலையாகவும், பசுமையான சமவெளிகள், விண்ணை முட்டும் மலைகள், வளைந்தோடும் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் பல இங்குள்ளன.
ஊட்டி, தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இடம் தான் ஊட்டி. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியின் மலை ரயில், மலர் கண்காட்சி என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் குறைந்த செலவில் பயணம் செல்ல வேண்டும் என்றால் முதலில் தேர்வு செய்யும் இடம் தான் ஊட்டி. இதே போன்று கொடைக்கானலும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
சக்லேஷ்பூர், கர்நாடகா: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் சக்லேக்பூர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற டிரக்கிங், நீர் வீழ்ச்சிகள், அழகிய மலைகள் என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. நிச்சயம் தீபாவளிக்கு சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாகவும் இது உள்ளது.
அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இடம் தான் அரக்கு பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகள், கண்களைக் கவரும் மலைகள், அமைதியான சூழல் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும். காபி தோட்டங்கள், மலைகளில் நீண்ட நேர பயணங்கள் அனைத்தும் இந்த இடத்தில் அமைந்துள்ளது.
கூர்க், கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளங்களில் ஒன்று கூர்க். தனிமையை விரும்புபவர்கள், இயற்கையின் அழகை பொருமையாக பார்க்க விரும்புவோர் தேர்வு செய்யும் இடம் தான் கூர்க். பெங்களுரில் இருந்து 5 மணி நேரத்திற்கு செல்லக்கூடிய இந்த இடம் இளைஞைர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவரக்கூடும்.
மூணாறு, கேரளா: கேரள மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்று தான் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பட்டு உடுத்தியது போல அழகிய தேயிலை தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், எரவிகுளம் தேசிய பூங்கா, போட்டிங் என பல இடங்கள் இங்கு அமைந்துள்ளது. மலைகளின் பயணம் செய்வோர்கள் மிகவும் விரும்பக்கூடிய இடமாகவும் மூணாறு பார்க்கப்படுகிறது.
ஏற்காடு, தமிழ்நாடு: தமிழ்நாட்டின் அழகிய மலைவாசஸ்தலமான ஏற்காட்டிற்கு குறைந்த செலவில் மக்கள் சென்று வரலாம்.. குளிர்ச்சியான கிளைமேட், போட்டிங், மலை ஏற்றம் என அனைத்தும் வெகுவாக சுற்றுலாப் பயணிகளை கவரும்.
குன்னூர், தமிழ்நாடு: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இடம் தான் குன்னூர். தேயிலைத் தோட்டங்கள், பச்சைப் பட்டு உடுத்தியது போல மலைத் தொடர்கள் அனைத்தும் அனைவரின் கண்களை வெகுவாக கவரும். குறிப்பாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் விதவிதமான மலர்கள் பூத்து குலுங்கும் என்பதால் அனைவரையும் தீபாவளிக்கு இந்த இடத்தை தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment