எளிதினில் கிடைக்கும் எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன...? - Agri Info

Adding Green to your Life

October 2, 2022

எளிதினில் கிடைக்கும் எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

 லுமிச்சை சாறு நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

மேலும் செரிமானம் நன்றாக செயல்படும்.










எலுமிச்சம் பழம் சாற்றில் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை அதிகமுள்ளது. சிறிய அளவிலான ரத்த காயங்களில் எலுமிச்சை சாற்றை சிறிது எடுத்து தடவுவதால் அக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தம் விரைவில் உறையவும் உதவுகிறது.

தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு எலுமிச்சை சாற்றை நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள், இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

காலையில் வெந்நீரில் 10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.


Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment