உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் உடல் மற்றும் குடல் என்ற இரண்டின் ஆரோக்கியத்தையுமே உறுதி செய்ய சாதனஉணவுகள் மட்டும் போதாது. அவற்றை நாம் சாப்பிடும் நேரமும் முக்கியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உணவை எடுத்து கொள்வது மிகவும் ஈஸியான ஒன்றாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் சாப்பிடும் நேரம் தொடர்பான விஷயத்தில் நாம் செய்யும் எளிய தவறுகள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்றைய நாளில் நாம் சாப்பிடும் நேரம் என்பது வேலைப்பளு, அலுவலக வேலை நேரங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து நாளுக்கு நாள் மாறுபடுகிறது. ஆனால் நாம் உண்ணும் நேரம் மற்றும் உணவுக்கு இடையில் கழிக்கும் நேரத்தின் அளவு ஆகியவை நமது ஆரோக்கியத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உணவு நேரம் ஏன் முக்கியம் மற்றும் சிறந்த உணவு நேரம் எது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
குறித்த நேரத்தில் சாப்பிடுவது ஏன் முக்கியம்.?
நாம் சாப்பாடு எடுத்து கொள்ளும் நேரங்கள் மற்றும் செரிமானம் ஆகியவை சர்க்காடியன் ரிதம் போன்ற உடலின் இயற்கை செயல்முறைகளுடன் தொடர்பு கொள்கின்றன. அதே போல நிலையான உணவு நேரம் என்பது நமது உடல்கள் நம்பகமான பசி குறிப்புகளை உருவாக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் உங்கள் உணவை உண்பதன் மூலம், எடை பராமரிப்பு, அதிக ஆற்றல் அளவுகள் போன்ற பல நன்மைகளை பெறலாம் மேலும் நோய்களை எதிர்த்து போராடலாம்.
காலை உணவை எத்தனை மணிக்கு சாப்பிடலாம்.?
காலையில் நாம் சாப்பிடும் உணவு தான் அன்றைய நாளை ஆற்றலுடன் தொடங்க உதவும். மேலும் நம்முடைய வளர்சிதைமாற்றம் சிறப்பாக இருக்க மென்மையான உண்ணவுகளுடன் நாளை தொடங்க வேண்டும். ஃபைபர் சத்துமிக்க மற்றும் சூடான உணவுகள் காலை நேரத்திற்கு ஏற்றவை என்று பரிந்துரைக்கும் நிபுணர்கள், 7 மணிக்குள் காலை உணவை சாப்பிட சொல்கிறார்கள். இல்லை என்றால் தூங்கி எழுந்ததில் இருந்து 1 மணி நேரத்திற்குள் சாப்பிடலாம். எப்படி பார்த்தாலும் காலை உணவை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.
மதிய உணவு.?
மதிய உணவை தினமும் 12:30 - 2 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் பரிந்துரை. மதிய நேரத்தில் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட ஒரு சீரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து உள்ளடக்கம் நிறைந்ததாக மதிய உணவு இருக்க வேண்டும். காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் 4 மணிநேர இடைவெளியை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதிகப்பட்சம் மதியம் 3 மணிக்குள் மதிய உணவை சாப்பிட்டு விட வேண்டும்.
காலை & மாலை ஸ்னாக்ஸ் டைம்.!!
காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் பசி எடுத்தால் பழங்கள் அல்லது சீட்ஸ் & நட்ஸ்களை சாப்பிடலாம். எந்த வகை ஸ்னாக்ஸாக இருந்தாலும் காலை 11 - 11.30-க்குள் சாப்பிட்டு விடுங்கள். அதுவே மதிய உணவிற்கு பிறகான ஸ்னாக்ஸ் என்றால் மாலை 4 முதல் 4.30-க்குள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மாலை ஸ்னாக்ஸ் டைமில் ஃப்ரெஷ் ஜூஸ்கள் இருப்பது சிறந்தது.
டின்னர் எப்போது சாப்பிடுவது.?
அன்றைய நாளின் கடைசி உணவு டின்னர் என்பதால் தூக்கத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்க லைட்டான உணவு வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாலை 6.30 முதல் இரவு 8 மணிக்குள் டின்னரை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக தூங்குவதற்கும், டின்னருக்கும் இடையில் 2 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் டின்னர் எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
0 Comments:
Post a Comment