உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது? - Agri Info

Adding Green to your Life

October 31, 2022

உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது?

 உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்கள் எல்லாருக்குமே நோய்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எந்த அளவுக்கு வரை உடல் பருமன் அல்லது பூசிய உடல்வாகு இருப்பது ஆரோக்கியமானது, எது ஆபத்தானது என்று இங்கே பார்க்கலாம்.

வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபத்தல்ல

உடலின் வளர்சிதை விகிதம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மரிங்கோ QRG மருத்துவமனையின், இன்டர்னல் மெடிசின் துறையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வரும் மருத்துவர் அனுராக் அகர்வால், இதைப்பற்றி விளக்கியுள்ளார். உடலில் கொழுப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பாடி மாஸ் இன்டக்ஸ் என்பதம் மூலம் கணக்கிடலாம். BMI 30க்கும் மேல் இருந்தால், அதிக கொழுப்பும், வளர்சிதை மாற்ற விகித ரீதியாக ஆரோக்கியம் அற்றவர் என்று கருதப்படும்.

ஆனால், BMI அதிகமாக இருந்தாலும், மெட்டபாலிக் ஹெல்த்தி ஓபிசிட்டி (வளர்ச்சிதை மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல்பருமன்) என்று வரும் போது, அதற்குரிய விதிகள் பொருந்தாது. இத்தகைய நபர்களுக்கு குறைவான வைஸ்சிரல் கொழுப்பு, அதிக சப்குடேனியஸ் கொழுப்பு, அதிக கார்டியோ ரெஸ்பிரேட்டரி திறன், சாதாரண இன்சுலின் உணர்திறன் உடன் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும், உடலில் அழற்சி ஏற்படும் காரணங்கள் ஆகியவை குறைவாக இருக்கும் என்று விளக்கினார்.

உடல் பருமன் வேறு சில நோய்களை ஏற்படுத்தலாம்

குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர், மருத்துவர் விகாஸ் சிங்க்ஹால் இதைப் பற்றி கூறுகையில், உடல் பருமனமாக இருப்பவர்களுக்கு மெடபாலிசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை, உடல்பருமன் ஆரோக்கியமானது என்று கருதக்கூடாது என்று தெரிவித்தார்.

உடல்பருமன் ஆரோக்கியமானது, ஆபத்தல்ல என்பதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக்கூடாது. வளர்ச்சிதை மாற்றம் சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இல்லை என்றாலும் கூட, இத்தகைய நபர்கள் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். கார்டியோ வாஸ்குலார் நோய்களால் பாதிக்கப்படாமல் இருந்தால் கூட, கல்லீரல் வீக்கம், தூக்கமின்மை, எலும்புகள் மற்றும் ஜவ்வு பிரச்னைகள், மலட்டுத்தன்மை, மன ரீதியான பாதிப்புகள் ஆகியவை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

எலும்புகள், நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மெட்டபாலிசம் நன்றாக இருந்தாலுமே அவர்களுக்கு வேறு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் ஸ்லீப் அப்னியா என்று கூறப்படும் தூக்கம் தடைபடும் பிரச்சனை ஏற்படலாம். ஒபீசிட்டியால் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படவில்லை என்றால் கூட எலும்புகள் பலவீனம் மற்றும் எலும்புகளில் துளைகளைக் குறிக்கும் ஆஸ்டியோ-ஆர்த்தரைட்டிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க, குறைக்க என்ன வழி?

உடல் பருமனைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் மற்றும் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற இரண்டு அளவீடுகள் தான் முக்கியமானவை. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொண்டு நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மற்றும் தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை இரண்டுமே உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.



Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment