Search

சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

 பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. பண்டிகை அல்லது விடுமுறை வந்துவிட்டாலே எங்காவது ஊர் சுற்றி பார்க்க கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் தோன்றும். ஆனால் பயண டிக்கெட், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது பட்ஜெட் கட்டுப்படியாகாமல் அப்படியே விட்டு விடுவோம். அதேபோல் பலரும் தினமும் ஒரே மாதிரியாக செய்து வரும் வேலையை விட்டு, விட்டு ஜாலியாக உலகத்தை சுற்றி வர விரும்புவார்கள், ஆனால் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அது சாத்தியமில்லாமல் போய்விடும்.

ஆனால் பாலிவுட் நடிகையும் பிரபல மாடலுமான ஷெனாஸ் ட்ரெஷரி, தனது பயண ஆசைக்காக தொழிலை விட்டு வெளியேறி, தற்போது ஊர் சுற்றிப்பார்ப்பதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார். தனது பயண அனுபவம், சுற்றுலாத்தளம் பற்றிய போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், சுற்றுலாவிற்காக பணத்தை சேமிப்பது எப்படி என சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார்.

பயணத்தை முழு நேர வேலையாக செய்து வரும் ஷெனாஸ் இதுகுறித்து கூறுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகை விட்டு விலகி, பயணம் செய்ய திட்டமிட்ட போது சம்பளத்திற்காக என்ன செய்யப்போகிறேன் என தெரியாது. ஆனால் பட்ஜெட் மற்றும் சேமிப்பு எனது கனவுகளை நனவாக்க உதவியது. எனவே அடுத்த முறை நீங்கள் பயணம் செய்ய திட்டமிடும் போது, பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக செலவழிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

1. பட்ஜெட் ப்ரெண்ட்லி தங்குமிடம்: 

விலையுயர்ந்த 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினால் தான் விடுமுறையை ஹேப்பியாக கழித்ததாக அர்த்தம் கிடையாது. புதுப்புது இடங்களை பார்ப்பது, புதிய மனிதர்களை சந்திப்பது, அங்குள்ளவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வது தான் பயணத்திற்கான மகிழ்ச்சியான அனுபவமாகும். எனவே பயணம் செல்லும் போது உங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல நிலையில் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது ஓட்டல்களை தேர்வு செய்ய வேண்டும்.


2. சம்பளத்தை சேமியுங்கள்: 

வாழ்க்கை ஒரு மாதிரி போர் அடிக்கிறது... எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும்... என யோசிக்கிறீர்களா?. அதற்கு முன்னதாக உங்கள் சம்பளம் அல்லது வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமித்து வைக்க வேன்டுமாம். ஆம், பயண செலவிற்காகவே தனியாக ஒரு கணக்கு தொடங்கி, வருமானத்தில் 10 சதவீதத்தை சேமித்து வைக்க வேண்டும்” என்கிறார் ஷெனாஸ் ட்ரெஷரி.


3. பட்ஜெட்டை பாலோ பண்ணுங்க: 

கஷ்டப்பட்ட சேர்த்துவைத்த பணத்தை செலவழிக்கும் முன்பு பட்ஜெட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் ஷெனாஸ் ட்ரெஷரி தெரிவிக்கிறார். “சுற்றுலா கிளம்பும் முன்பே மொத்த செலவையும் கணக்கிட்டு, பட்ஜெட்டை தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையும் ஈவு, இரக்கம் காட்டாமல் பட்ஜெட்டை ஸ்ட்ரிக்டாக பாலோ செய்ய வேண்டும்” என்கிறார்.

4. செலலவு கண்காணிப்பு: 

பட்ஜெட்டை உருவாக்கினால் மட்டும் போதாது, செய்யும் ஒவ்வொரு செலவையும் கண்காணிக்க வேண்டும். இதனால் பயணத்தின் போது அதிகமாக செலவு செய்வதை முன்கூட்டியே அறிந்து, தவிர்க்க உதவும். தனிப்பட்ட முறையில் கணக்கு வழக்குகளை செல்போன் ஆப்கள் அல்லது நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தோ கண்காணிக்கலாம்.

5. சேமிப்பு ஹேக்: 

விமான நிறுவனங்கள், கிரெடிட் கார்டுகள், ஹோட்டல்கள் போன்றவற்றால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பயண டிக்கெட்கள், ரூம் ஆகியவற்றை ஆன்லைன் அல்லது ஆப்கள் மூலமாக புக் செய்யும் போது கிரெடிட் பாண்ட்களை சேகரிப்பதும் தள்ளுபடிகள் பெற உதவும்.

6. அட்ஜஸ்ட்மெண்ட் அவசியம்: 

எப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பட்ஜெட்டிற்குள் சுற்றுலா தளங்களை பார்வையிட விரும்பினால் ஆஃப் சீசன்களைத் தேர்வு செய்யலாம். இது தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பயண செலவுகளையும் குறைக்க உதவும். அதேபோல் சின்ன சின்ன வசதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதும் பயணத்தை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும்.

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment