நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பில்லியன் கணக்கான பாக்டீரியக்களால் பல் சிதைவு ஏற்படுகிறது. எனவே பற்களைப் பராமரிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
“பல் போனால் சொல் போகும்“ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. நம்முடைய குரல் வெளிப்படுவதற்கு மற்றும் முகத்தை அழகாகக் காண்பிப்பதற்கும் உதவியாக உள்ளது பற்கள் தான். இதோடு மட்டுமில்லை இதய நோய்கள், இரத்தச்சோகை, சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகள் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகளை பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில் தான் முதலில் தெரியவரும். இதற்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள் தான்.
பல் சிதைவு ஏற்படக்காரணம்?… நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் பல் தகடு எனப்படும் பயோஃபில்ம் வடிவத்தில் கழிவுகளை விடுகின்றன. இந்த பல் தகடுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் பற்களில் ஒட்டிக்கொண்டிருந்து இறுதியில் அமிலங்களை உருவாக்குகிறது. இது பற்களின் பற்களின் தன்மையைக்குறைப்பதோடு, பல் இடுக்குகள் மற்றும் பற்சிதைவை ஏற்படுத்துகிறது. எனவே நம்முடைய பற்களை எப்போதும் பாதுகாப்பாக வைக்காவிடில் எண்ணற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் தான் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் பல் பராமரிப்பு பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நம்ரதா ரூபானி..
பல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்கான வழிமுறைகள்:
பல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு எப்போதும் நீங்கள் ஆரோக்கிய உணவைச் சாப்பிட வேண்டும். அதிகளவு சர்க்கரை உட்கொள்ளுதல் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃவுளூரைடு பற்பசை மற்றும் மென்மையான பல் துலக்குதலைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பல்களில் முட்கள் அணிந்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பற்களின் ஆரோக்கியத்தைப் பேணிகாக்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று, வழக்கமான பல் பரிசோதனைகள் மற்றும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
நாம் தினமும் அதிகப்படியான உணவுப்பொருள்களை உட்கொள்ளுவதால் நாக்கில் பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்களைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுமுறைகள்:
பால்: பால் சம்பந்தப்பட்ட பொருள்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது. மேலும் கேசீன் என்ற புரதம் அதிகளவில் உள்ளதால் பல் பற்சிப்பியைப் பாதுகாப்பதோடு பல் சிதைவையும் தடுக்க உதவுகிறது.
இலை காய்கறிகள்: முட்டைகோஸ், கீரை, ப்ரோக்கோலி, போன்ற இலை காய்கறிகளில் இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அனைத்தும் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை நோய் மற்றும் காயங்களிலிருந்து பாதுகாக்கிறது.
நார்ச்சத்துள்ள பழங்கள் : ஆப்பிள் போன்ற நார்ச்சத்துள்ள பழங்கள் உங்கள் பற்களைப் பாதுகாப்பதற்கு சிறந்தது. இவற்றை உணவில் எடுத்துக்கொள்ளும் போது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது.
இதோடு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடும் போது பற்களைப் பாதுகாக்க உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு, ஈறுகளில் இரத்தம் வலிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்...
No comments:
Post a Comment