நம் பள்ளி நாட்களில் காலையில் கிளம்பும் பொழுது நம்முடைய அம்மாக்கள் உதட்டில் நெய்யை தடவி விடும் காட்சிகள் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். முக்கியமாக குளிர் காலங்களில் இதை அவர்கள் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் குளிர்காலங்களில் சருமத்தில் அதிகப்படியான வறட்சியும், உதடுகளில் வெடிப்பும் அதிக அளவில் ஏற்படும்.
தற்போது இதை தடுப்பதற்காக சந்தையில் பல்வேறு லிப் பாம்களும், மேலும் பல இயற்கை பொருட்கள் அடங்கிய சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் இவை எதுவுமே வீட்டிலே கிடைக்கும் நெய்யின் அளவிற்கு ஈடாக முடியாது.இயற்கையாக கிடைக்கும் நெய்யில் உடலுக்கு முக்கிய தேவையாக இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன ஒமேகா 3, விட்டமின் ஏ, B12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மற்றும் ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது
இவற்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் :
1. சருமத்தை நாள் முழுவதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்புடனும் வைக்க உதவுகிறது.
2. கண்களின் கீழே ஏற்படும் கருவளையங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்க உதவுகிறது
3. வறண்ட சருமத்தை சரி செய்து செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உதட்டில் ஏற்படும் வெடிப்பையும் சரி செய்கிறது.
4. சிறிய சிராய்ப்புகள் காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது நெய்யை தடவும் போது காயங்கள் விரைவாக குணமடைய உதவுகிறது
5. கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இவை மட்டுமல்லாமல் இயற்கையாக கிடைக்கும் நெய்யை கொண்டு தயரிக்கப்படும் ஃபேஸ் மாஸ்க்கின் மூலமும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நெய்+கடலைமாவு+மஞ்சள் கலந்து ஃபேஸ் மாஸ்க்:
நெய், கடலை மாவு மற்றும் அதனோடு சிறிது மஞ்சள் சரியான விகிதத்தில் தேவைப்படும் அளவில் சேர்த்து செய்யப்படும் பேஸ் மாஸ்க் முகத்தை மென்மையாகவும் சரியான அளவில் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் அதில் சேர்க்கப்படும் கடலை மாவு இயற்கையாகவே இறந்த செல்களை நீக்கும் தன்மையை பெற்றுள்ளதால் அவை சருமத்தில் உள்ள கருமையை அடியோடு போக்குகின்றன.
நெய் மற்றும் சோற்று கற்றாழை ஃபேஸ் மாஸ்க்:
நெய் மற்றும் சோற்று கற்றாழை ஆகியவற்றை நன்றாக கலந்து அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கை மூட்டுகளிலும், கால் மூட்டுகளிலும் தடவி வர வேண்டும். தடவிய பின்பு அரை மணி நேரம் கழித்து அதனை கழுவி விடலாம். இதனைத் தொடர்ந்து செய்து கொண்டு வர நாளடைவில் அங்குள்ள கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருப்பதுடன் சரும வரட்சியால் ஏற்படும் கடினத் தன்மையை நீக்கி மென்மையாக மாற்றுகிறது. சருமத்தை நீர்ச்சத்துடனும், ஈரப்பதத்துடனும் வைப்பதற்கு இந்த பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.
நெய்+கடலைமாவு+பால்+சர்க்கரை கலவை :
நெய் கடலை மாவு பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். பின்பு அதனை நம்முடைய உடல் முழுவதும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு அதில் உள்ள சர்க்கரை மற்றும் கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை உடனடியாக நீக்குகிறது. மேலும் நெய் மற்றும் பால் ஆகியவை உடனடியாக செயல்பட்டு சரும வறட்சியை சரி செய்வதுடன் அதிகபடியான பளபளப்பையும் அளிக்கிறது.
நெய்+தயிர்+தேன்+முட்டை கலவை :
நெய்யுடன் தயிர் தேன் மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு இதனை ஷாம்புவிற்கு பதிலாக தலைமுறைக்கு பயன்படுத்தலாம் அல்லது ஹேர் மாஸ்க் போலவும் பயன்படுத்த முடியும். தலைமுடியில் அப்ளை செய்து விட்டு பின்பு ஒரு மணி நேரத்திற்கு காய விட வேண்டும். இதில் முடியில் உள்ள பாக்டீரியாக்களை கொள்வதுடன் அதில் உள்ள தேனானது எரிச்சல் உண்டாகவாது பாதுகாக்கிறது. நீயும் முட்டையும் வெள்ளை கருவும் முடிக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது.
நெய்யுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் :
நெய்யுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெயும் அல்லது பாதாம் எண்ணெயும் கலந்து கைகளில் தடவிக் கொள்ளலாம் இதன் மூலம் வறண்ட சரும பிரச்சனை சரி செய்யப்பட்டு தோல் மென்மையாகவும், பளபளப்புடனும் மாறுகிறது. மேலும் நெய் மற்றும் எண்ணெய் ஆகியவை சருமத்திற்குள் ஊடுருவி தோளின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment