ஆர்த்ரைட்டீஸ் என்றால் என்ன..? அறிகுறிகளும்... சிகிச்சை முறைகளும்... - Agri Info

Adding Green to your Life

October 14, 2022

ஆர்த்ரைட்டீஸ் என்றால் என்ன..? அறிகுறிகளும்... சிகிச்சை முறைகளும்...

ஆர்த்ரைட்டீஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் அதிகப்படியான வீக்கம் மற்றும் கடினத் தன்மையால் வலியை உண்டாக்கும் ஒரு நோயாகும். இதில் பலவித மூட்டு வலி சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளன. இவற்றில் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் மற்றும் ரியோமெட்டோயிட் ஆர்த்ரைடீஸ் ஆகியவை பொதுவாக ஏற்படும் நோய்கள் ஆகும். வயதாக ஆக அது மிகவும் வலியை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

டாக்டர் யாதவ் என்பவர் ஆர்த்ரைட்டீஸ் பற்றி கூறுகையில், தவறான உணவு பழக்க வழக்கங்களும், தூக்கமின்மை மற்றும் தூங்கும் நேரங்களில் மாற்றம் மற்றும் பல வாழ்க்கை முறைகளும் இந்த ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு காரணமாக அமைவதாக தெரிவித்துள்ளார்.

சரியான சத்துள்ள உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் ஆர்த்ரைட்டீஸ் மட்டுமின்றி மற்றும் பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ரியோமெட்டோயிட் ஆர்த்ரைடீஸ் சரியாக தூங்காமல் இருப்பதால் ஏற்படுகிறது. எனவே சரியான தூக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

மது அருந்துதல் புகைப்பிடித்தல் ஆகியவை ஆர்த்ரைட்டீஸ் மட்டுமின்றி மற்றும் பல கொடிய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. புகைப்பிடிப்பதும் அதிகளவில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதும் உடலை பலவீனமாக மாற்றுவதோடு மூட்டுகளை பலவீனப்படுத்தி ஆர்த்ரைட்டீஸ் நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகமாக்குகிறது.

ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள்:

உண்மையில் ஆர்த்ரைட்டீஸ் என்பது குறிப்பிட நோயை குறிப்பதல்ல. மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலி மற்றும் அந்த வலியை ஏற்படுத்தும் நோயை குறிப்பதே ஆர்த்ரைடீஸ் ஆகும். ஒட்டு மொத்தமாக 100 க்கும் மேற்பட்ட ஆர்த்ரைடீஸ் வகைகள் உள்ளது. அவர்களின் வயது, வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் நபருக்கு நபர் மாறுபடுகிறது இதைபற்றி டாக்டர் அகிலேஷ் யாதவ் என்ற எலும்பியல் நிபுணரும் வைஷாலி மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவருமான டாக்டர் அகிலேஷ் யாதவ் என்பவர் ஆர்த்ரைட்டீஸ் ஏற்படுவதற்கான ஆரம்ப கால அறிகுறிகளை பற்றி கூறியுள்ளார்.

பொதுவாக இந்த நோய் தாக்கும் அனைவருக்கும் ஆரம்ப காலங்களில் மூட்டு இணைப்புகளில் வலியானது குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திலும் ஏற்படுகிறது.

மூட்டுகளில் விறைப்புத்தன்மை காலை நேரங்களில் அதிகமாக ஏற்படுவது :

ஹிப் ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட பலரும் அடிவயிற்றில் வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இடுப்பிற்கு வெளியே அல்லாமல் இடுப்பு எலும்புகளுக்கு உள்ளே இந்த வலியை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

சிமெண்ட்ரிக்கல் ஜாயிண்ட் பெயின் என்னும் வகை யாத்திரைஸ் ஒரே விதமான மூட்டுகளையும் அல்லது உடலின் இரண்டு பக்க மூட்டுகளை பாதிக்கிறது உதாரணத்திற்கு வலது இடது என இரண்டு கால்களின் மூட்டுகளையும் அல்லது வலது மணிக்கட்டு இடது மணிக்கட்டு என இரண்டு பக்கங்களிலும் இந்த நோய் ஏற்படலாம்.

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்:

அதிகமான உடல் எடை மற்றும் உடல் பருமன்:

அதிக அளவில் உடல் பருமன் அல்லது உடல் எடையுள்ள மக்கள் இந்த நோயினால் மிக எளிதாக தாக்கப்படுகிறார்கள். முக்கியமாக சரியான உடல் எடை சரியாக இல்லாதவர்களை இந்த நோய் எளிதாக தாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மூட்டுகளை நீண்ட நேரத்திற்கு மடக்கி வைத்துக் கொண்டிருப்பதும், அடிக்கடி அதன் மீது அழுத்தம் அல்லது அதிகப்படியான வேலை கொடுப்பதும் இந்த ஆர்த்ரைடீசுக்கு வழிவகுக்கிறது.

ஆஸ்தியோ ஆர்த்ரைடீஸ் :

ஆர்த்ரைட்டிஸ் வகை நோய்களிலே இந்த ஆஸ்தியோ ஆர்த்ரைடீஸ் பொதுவானதாகும். மூட்டு இணைப்புகளில் உள்ள குருத்தெலும்புகளின் திசுக்கள் சிதைவதினால் இந்த நோய் ஏற்படுகிறது. திசுக்கள் சிதைந்து எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து அதிக வலியையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

இது உடனடியாக ஏற்படுவது அல்ல. இந்த நோய் சிறிதாக ஆரம்பித்த பின்பு வருட கணக்கில் வளர்ந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மற்றொரு உதாரணமாக காலை வேலைகளில் மூட்டுகளில் அதிக விரைப்புத் தன்மையும் அதன் பிறகு சாதாரணமாக மாறிவிடுமாக இருந்தால் உங்களக்கு ஆஸ்தியோ ஆர்த்ரைட்டீஸ் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

ரியோமெட்டோயிட் ஆர்த்ரைடீஸ் :

இந்த நோயானது, நோய் எதிர்ப்பு திறன் திசுக்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்பினால் ஏற்படுகிறது. இது இன்னும் வளர்ந்து உடல் உறுப்புக்களை சேதப்படுத்த ஆரம்பிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வலி, விறைப்பு தன்மை ஆகியவை இந்த நோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் ஆகும்.

இதைப்பற்றி நெஃப்ரோ ப்ளேஸ்-ன் சீனியர் மருத்துவரும் சிறுநீரகவியல் வல்லுநருமான டாக்டர் சுரேஷ் சங்கர் என்பவர் கூறுகையில், இந்த ஆர்த்ரைட்டீஸ் நோய் நாளடைவில் நேரடியாக சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள், சில நேரங்களில் பக்கவிளைவாக சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் பாதிப்பை உறுதி செய்வதற்கு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளிலும் அந்த மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவால், பரிசோதனை முடிவுகளும் தவறாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன என்று தெரிவித்துள்ளார்.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment