Search

எடை குறைகிறது என சந்தோஷப்படுறீங்களா..? எச்சரிக்கை... உடல்நல பாதிப்பாகவும் இருக்கலாம்..!

 உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு கிலோ எடை குறைந்தாலும், மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், எடை குறைகிறது என்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் அல்ல. சில நேரங்களில் நீங்கள் முயற்சி செய்யாமலே எடை குறைகிறது என்பது உடல் நலக் கோளாறை அல்லது நோயைக் குறிக்கிறது. எனவே, நோய் தீவிரமாகும் முன்பே நீங்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சைகளை பெற வேண்டும். உங்கள் உடல் எடையை குறைக்கும் நோய்கள் பற்றிய பட்டியல் இங்கே.

நீரிழிவு நோய் : உடல் பருமனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதே போல, நீரிழிவு நோய் தீவிரமாகும் போது, அதாவது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது, உடல் மெலியத் தொடங்குகிறது. உடலில் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றால், செல்களுக்கு ஆற்றல் கிடைக்காது. எனவே, உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு தசைகளில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்கும். எனவே, உடல் எடை குறையும்.

ஹைப்பர் தைராய்டிசம் : உடலின் அனைத்து செயல்களுக்கும் முக்கியமான ஹார்மோனான தைராய்டு ஹார்மோன், அதிகமாக சுரந்தாலும் ஆபத்து, குறைவாக சுரந்தாலும் பிரச்சனை. உடலின் தேவையை விட அதிகமாக தைராய்டு ஹார்மோன் சுரப்பதன் பெயர் தான் ஹைப்பர் தைராய்டிசம், அதாவது தேவைக்கு மேல் அதிகமாக தைராய்டு சுரப்பி இயங்கி வருகிறது. இந்த குறைபாட்டால், உடல் எடை கணிசமாக குறைந்து மெலிந்து விடும். பசி எடுப்பது சாதாரணமாக இருந்தாலும், வழக்கம் போல சாப்பிட்டாலும், எடை குறையும்.

பெப்டிக் அல்சர் : சாப்பிடாமல் இருந்தால் எவ்வாறு உடல் மெலியத் தொடங்குமோ, அது போல பெப்டிக் அல்சர் பாதிப்பிலும் காணப்படும். அல்சர் இருக்கும் போது, உணவுக் குழாயில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் சரியாக கிரகிகப்படாது. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக இருப்பது போல உணர்வீர்கள். எனவே, விரைவில் உடல் மெலியும்.

டிமென்ஷியா : ஞாபக மறதி என்று கூறப்படும் டிமென்ஷியாவுகும் எடை குறைவதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மற்ற நோய்கள் மற்றும் குறைபாடுகளை விட, காரணம் தெரியாமல் எடை குறைவதில் முதல் இடத்தில் டிமென்ஷியா தான் இருக்கிறது.
2017 ஆம் ஆண்டில் டிமென்ஷியா பற்றி நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், காக்னிட்டிவ் பாதிப்பு இருக்கும் நோயாளிகளில் காரணமே இல்லாமல் எடை குறைகிறது உறுதியாகி உள்ளது. மருத்துவ அமைப்பு அனுமதி பெற்ற டிமென்ஷியா மருந்துகளுமே எடை குறைக்கிறது என்பது ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

புற்றுநோய்: காரணமே இல்லாமல், உடல் எடை கணிசமாக குறைந்து நீங்கள் மெலிந்து போகிறீர்கள் என்றால், அதற்கு புற்றுநோய் முக்கியமான காரணியாக இருக்கலாம். மருத்துவ ஜர்னல்களில், ஆய்வுகளில், எடை குறைவு தான் புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய வேலைகள் செய்தால் கூட, தீவிரமான சோர்வு, ஆற்றல் குறைவு, மயக்கம் உள்ளிட்டவையும் ஏற்படும்.


Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment