இந்த காய்கறிகளை உணவில் சேர்த்தால் தலை முடி அடர்த்தியா வளருமாம் - Agri Info

Adding Green to your Life

October 14, 2022

இந்த காய்கறிகளை உணவில் சேர்த்தால் தலை முடி அடர்த்தியா வளருமாம்

 முடி வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்: வலுவான மற்றும் அடர்த்தியான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தவறான பழக்கவழக்கங்களால், முடி தொடர்பான பிரச்சனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்தல், சிறு வயதிலேயே முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகள் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், உங்கள் வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்த வேண்டும். எனவே முடி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதன்படி கூந்தல் பிரச்சனைகளை தவிர்க்க எந்தெந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சிக்கு இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்

கறிவேப்பிலை
முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகமிகச் சிறந்த உணவு. அதன்படி காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கொப்புக் கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, மென்று உண்டால் அது கருமை நிறமான கார் மேகக் கூந்தல் வளரக் கட்டாய கேரண்டி.

பீன்ஸ்

பீன்ஸ் உட்கொள்வது நீண்ட மற்றும் வலுவான கூந்தலைப் பெற மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், இரும்பு, பயோட்டின், ஃபோலேட் மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் பீன்ஸில் காணப்படுகின்றன, இது முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் செய்கிறது. எனவே, முடி வளராமல் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பசலைக்கீரை
அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற கீரையை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். கீரையில் போதுமான அளவு வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் ஃபோலேட் உள்ளது, இவை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கருதப்படுகிறது, அதை உட்கொள்வது உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் பல நன்மைகளை தருகிறது.

கேரட்
கேரட்டில் உள்ள சத்துக்கள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் காணப்படுகின்றன. இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் முடி வளர்ச்சி சரியாகும் மற்றும் அனைத்து முடி பிரச்சனைகளும் நீங்கும்.

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment