இன்றைக்கு பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை காற்று மாசுபட்டுத்தான் கிடைக்கிறது. இயல்பை விட அதிகளவு காற்று மாசு ஏற்பட்டாலும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதோடு ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் மக்களுக்கு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை சுத்தமானக் காற்றை சுவாசிக்க நாம் முயல வேண்டும்.
ஆனால் இது பொது இடங்களில் குறைவான அளவே என்றாலும், வீட்டிற்குள் இருக்கும் காற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது நம் அனைவரின் கடமை. இதோ அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
வீட்டினுள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வழிமுறைகள்…
காற்றோட்டத்தை அதிகரித்தல்:நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போது ஜன்னல் மற்றும் கதவை அடைத்து வைக்காதீர்கள். இதனால் உங்களது அறைக்குள் காற்று ஒட்டம் சரியாக இருக்காது. இதனால் ஈரமான வாசனை உங்களது அறைக்குள் சுற்றி வரும் என்பதால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. எனவே எப்போதும் வீட்டிற்குள் காற்று செல்லும் படியாக திறந்து வைத்திருப்பது அவசியம்.
வீட்டினுள் செடிகளை வளர்த்தல்: உங்களது வீட்டிற்குள் எப்போதும் சுத்தமாக காற்று உலா வர வேண்டும் என்றால் உள்ளே தாவரங்களை வளர்க்க வேண்டும். இது நச்சுத்தன்மையுள்ள காற்றை சுவாசித்து, வீட்டினுள் சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை வெளியிடுகிறது. குறிப்பாக அல்லி, கற்றாழை, பீஸ் லில்லி, ஸ்பைடர் தாவரம் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
காலணிகளை வெளியில் வைத்தல்: சில வீடுகளில் காலணிகளை வீட்டிற்குள் உள்ளேயே வைப்போம். வெளி இடங்களுக்கு சென்று வருவதால் இதில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்தவரை உங்களது அறைகளுக்கு வெளியே செப்பல் மற்றும் சூக்களை வைத்திருக்க முயலுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 50 சதவீதம் தொற்று நோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.
அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்துதல்: பெப்பர்மின்ட் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்கள் இனிமையான இயற்கை மணம் கொண்டவை என்பதால், இவற்றை அதிகளவில் நீங்கள் வீட்டிற்குள் உபயோகிக்கலாம். இவை நல்ல மணத்தை அளிப்பதோடு உடலுக்கும் புத்துணர்ச்சியாக உள்ளது.
உங்களது வீட்டினுள் உட்புறக் காற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மரத்திலான செய்யப்பட்ட கூடைகள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருள்களைப் பயன்படுத்த முயலுங்கள்.
முக்கியமான 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள ஃபேன், ஏசி போன்ற சாதனங்களை எப்போதும் தூய்மையாக பராமரிக்க முயலுங்கள்.
தற்போது அனைவரின் வீடுகளிலும் செல்லப்பிராணிகள் நிச்சயம் ஏதாவது ஒன்று இருக்கக்கூடும். எனவே உங்களது செல்லப்பிராணிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். இதன் மூலம் நச்சுக்காற்று உங்களது வீட்டைச் சுற்றி வர வாயப்பில்லை.
இதோடு ஈரமான துணிகளை எப்போதும் வீட்டினுள் வைக்காதீர்கள். முடிந்தவரை வெயில் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதுப்போன்ற சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
No comments:
Post a Comment