இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் !! - Agri Info

Adding Green to your Life

October 2, 2022

இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் !!

 சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்துப் பொருளாக ஓமம் பயன்படுத்தப்படுகிறது.

ஓமம் ஏராளமான ஊட்டச் சத்துகளை கொண்டுள்ளது. ஓமத்தில் புரோட்டின், பைபர், சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B1, B3, கொழுப்பு, மினரல், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் இடம்பெற்றுள்ளன.











மலச்சிக்ககல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல், வயிறு, உணவுக்குழாய் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றலையும் ஓமம் கொண்டுள்ளது.

சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. இதனால் இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. இதன் மூலம் மூக்கடைப்பு தொல்லையில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.

வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.


Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment