Body Detox: உடலின் நச்சுக்களை நீக்கும் நார்ச்சத்து நிறைந்த 'சில' உணவுகள்! - Agri Info

Adding Green to your Life

October 10, 2022

Body Detox: உடலின் நச்சுக்களை நீக்கும் நார்ச்சத்து நிறைந்த 'சில' உணவுகள்!

 நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது., ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுகளும் வெளியேற்றப்படுகின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.

நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. நார்சத்து நிறைந்த பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

2. பொதுவாக நாம் உணவில் அக்கறை காட்டுவதில்லை. வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடல் நலத்தை மோசமாக்குகிறது. மேலும், வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

3. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் குடிப்பதும் நன்மை பயக்கும். நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் இருக்கும்.

4. நார்ச்சத்து நிறைந்த உணவு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

5. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதுமன அழுத்தத்தைக் குறைத்து

மனநிலையை மேம்படுத்தும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

6. உடலில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானம் சரியாக நடைபெறாது. இதனால் உடலில் கொழுப்பு வேகமாக சேரத் தொடங்குகிறது. நார்ச்சத்து உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

7. மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற கடுமையான நோயை ஏற்படுத்தும், எனவே மலச்சிக்கலை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உடலில் நார்ச்சத்து இல்லாதது மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணம் .

நார்ச்சத்து நிறைந்த 'சில' உணவுகள்

1. ஸ்ட்ராபெர்ரி
2. பச்சை பட்டாணி
3. ப்ரோக்கோலி
4. உருளைக்கிழங்கு
5. பருப்பு வகைகள்
6. முட்டைக்கோஸ்
7. கேரட்
8. ஓட்ஸ்
9. ஆரஞ்சு
10. பாதாம்
11. சியா விதைகள்
12. பேரிக்காய்
13. வாழைப்பழம்
14. ஆப்பிள்

No comments:

Post a Comment