உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது? - Agri Info

Education News, Employment News in tamil

October 31, 2022

உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?

 காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது.

எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்த பலரும் பரிந்துரைக்கிறார்கள்.

வெள்ளை சர்க்கரை என்பது பீட் அல்லது கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். அதே நேரம் வெல்லம் சுத்திகரிக்கப்படாத கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை கடுமையான செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் போய்விடுகின்றன. ஆனால் வெல்லம் கரும்பு பாகை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல நிறைந்துள்ளன என கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் எதை பயன்படுத்த வேண்டும்..? சர்க்கரையைத் தவிர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

வெல்லம் சர்க்கரைக்கு மாற்று இல்லை. வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை சேர்ப்பது, உணவுகளை சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றும் என்று பலர் நினைக்கலாம். இருப்பினும் நிபுணரின் கருத்துப்படி இது முற்றிலும் உண்மை இல்லை. வீடுகளில் வெல்லம் மற்றும் சர்க்கரையின் பயன்பாடு வெவ்வேறு சீசன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

வெல்லம் அல்லது சர்க்கரை என்று கேப்ஷன் கொடுத்துள்ள போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, "சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வெறுமனே இனிப்புகளில் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது . நீங்கள் இவற்றை சீசனுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெல்லம் குளிர்காலத்தில் உட்கொள்ள ஏற்றது, அதுவே கோடை என்றால் சர்க்கரை மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டுளார்.

இதனிடையே மற்றொரு இன்ஸ்டா போஸ்ட்டில் சர்க்கரையைத் தவிர்ப்பது மற்றும் எந்த வகையான சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியமற்றது என்பதைப் பற்றி கூறி இருக்கிறார். பேக்கேஜ்ட் ஃபுட் மற்றும் அல்ட்ரா-ப்ராசஸ்டு ஃபுட்களில் இருக்கும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.


Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment