சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 22க்கு பதிலாக 26ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான ஆதிசேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கணினி வழியில், சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி, திருநெல்வேலி,சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் டிசம்பர் 22 அன்று கணினி வழியில் நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வை டிசம்பர் 26ம் தேதிக்கு டிஎன்பிஎஸ்சி மாற்றி வைத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 26 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும்.