12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு - Agri Info

Adding Green to your Life

November 16, 2022

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு

 டாடா குழுமத்தில் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி படித்த இளைஞர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பணி விபரம்
Cabin Crewவிமான பயணத்தில் பாதுகாப்பு மற்றும் சேவையை உறுதி செய்தல்
Duty Manager(Ground Handling Services)ஏர் இந்தியா பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்தல்
Service Assurance Officerவிமான பயணிகளில் தேவையை சந்திப்பது.
Ramp Operations Supervisorதுரிதமான ramp handling services கொடுப்பது
Customer Service Manager – Non–Voice and Voiceஇமெயில் மற்றும் தொலைப்பேசி மூலம் நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்குவது

இப்பணிக்கு  தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

பணியின் பெயர்கல்வித்தகுதிஅனுபவம்
Cabin Crew12 ஆம் வகுப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்
Duty Manager(Ground Handling Services)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5 -12 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Service Assurance Officerஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.3 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Ramp Operations Supervisorஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5-12 ஆண்டுகள் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Customer Service Manager – Non–Voice and Voiceஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5 -12 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது

வயது :

ஏர் இந்தியா Cabin Crew-வில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம். புதியவர்களுக்கான வயது வரம்பு 18-22 வரை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். நேர்காணல் விவரங்கள் அவர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஏர் இந்தியா பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் முகவரி:

பணியின் பெயர்ஆன்லைன் முகவரி
Cabin Crewhttps://content.airindia.in/careers
Duty Manager(Ground Handling Services)https://content.airindia.in/careers
Service Assurance Officerhttps://content.airindia.in/careers
Ramp Operations Supervisorhttps://content.airindia.in/careers
Customer Service Manager – Non–Voice and Voicehttps://content.airindia.in/careers

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click here to join WhatsApp group for Daily employment news  

No comments:

Post a Comment