Search

பிளஸ்2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு HCL-ல் பணிபுரிய வாய்ப்பு - பயிற்சியுடன் கூடிய வேலை!

 2021 அல்லது 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகின்றனர். இந்த திட்டத்தில் சேர அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.

2021-2022 – ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு திறன் மேம்பாடு வாய்ப்புகளை வழங்க அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி படித்த மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee ”Early Career Program”க்கான பயிற்சிக் கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்குவதுடன் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு:

தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது.

Internship பயிற்சியின்போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/- உதவித்தொகையைப் பெறலாம்.

பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை வழங்கப்படும் (பணிநிலைக்கு ஏற்றாற்போல்)

HCL Technologies – ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பை பெற்றுத் தருகின்றது.

மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee”திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. HCL Techbee ”Early Career Program”மில் மென்பொருள் வடிவமைப்பு, அனலிஸ்ட், டிசன் என்ஜீனியர், டேடா என்ஜீனியர், சம்போர்ட் மற்றும் பாரஸ்சஸ் அசோசேட், சர்வீஸ் டெஸ்க் மற்றும் டிபிஒ பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிரிவில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – 88079 40948. மதுரை – 9788156509. திருநெல்வேலி – 98941 52160. திருச்சி – 94441 51303. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர்– 89032 45731, 98655 35909.


Click here to join WhatsApp group for Daily employment news  

0 Comments:

Post a Comment