ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ராணிப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த முகாமில் காலியி டங்கள் முழுவதும் பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக 2020, 2021, 2022-ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும், 18 முதல் 20 வயதுக்குட் பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மாதச் சம்பளம் 16 ஆயிரத்து 557 ரூபாயும், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
இதில், எஸ்சி/எஸ்டி மனு தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதி உள்ள வர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் காலை 9 மணிக்கு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment